Saturday, September 9, 2006

அது ஒரு அழகிய நிலாக்காலம்

சங்க காலம், சங்கமருவிய காலம் என்று சொல்வதுபோல ட்யூஷன் காலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு 90 களில் யாழ்ப்பாணம் எங்கும் ட்யூஷன் வகுப்புகள் ஆக்கிரமித்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே படத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்களும், சினிமாக்களும் தடை செய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமை இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.

வேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன் சென்ரர் (இதனை தொடக்கியவர் இப்போதும் கனடாவில் இதே பெயரில் ட்யூஷன் வகுப்புகளை எடுக்கிறார், இவரது மகன் எனது நண்பன்) day claasses க்கு பெயர் பெற்ற விக்னா என்பவை இதில் முக்கியமானவை.

இதில் எடிசன் அக்கடமி யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்கு இந்துக் கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கி வந்தது. இப்போது திரும்பி பார்க்கும் பொழுது 10 வருடங்கள் ஆன பின்னும் அந்த காலம் தான் எமது வசந்தகாலம் என்று தோன்றுகிறது.

திரைப்படங்களுக்கு விளம்பரம் தருவது போல இளஞர்களால் இளைஞர்களுக்காக நடந்த ட்யூஷன் இது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு ஆங்கில ஆசிரியராக இருந்த சத்தியமூர்த்தி அவர்கள் இப்போது கனேடிய வானொலிகளில் ஆலய உற்சவங்களை வர்ணனை செய்கிறார். அவரது வகுப்பு மத்தியான நேரங்களில் நடப்பதாலும், அந்நேரம் அருகிலிருந்த கொக்குவில் இந்து மைதானத்தில் க்ரிக்கெட் மாட்ச் நடப்பதாலும் அவரது வகுப்பை விட்டு நாம் ஓடுவதும் அப்படி ஓடுபவர்களை துரத்திபிடிப்பதும் இப்போது நினைத்தாலும் சிரிப்புதான். தயா, விசாகன், பாலன், பிரதீவன், வாசன் என்று எமது கூட்டணி இப்படி ஓடுவதில் முண்ணனி வகித்தது குறிப்பிடத்தக்கது. இதில் நானும் பிரதீவனும் ஒரே மாதம், திகதிகளில் பிறந்தவர்கள். ஒருமுறை ஒரு பரீட்சையில் அவனும் நானும் date of birth ஒன்றாகப் போட்டதை நாம் copy பண்ணியதாக எண்ணி டோஸ் விட்டதும் நாம் எவ்வளவு சொல்லியும் நம்ப மறுத்ததும் தனிக்கதை.

அங்கு படிப்பித்த கோபி அப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன், சற்று தடித்த குரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்திவிட்டபடி அவர் பேசும் ஸ்டைலுக்கு ரசிகர் கூட்டமே இருந்தது. அது மட்டுமல்ல சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் போகும். “நீர் எங்கேருந்து வாறனீர்”, “நீர் ஏன் ரம்புட்டான் பழ வியாபாரி போல துரத்தி துரத்தி கதைக்கிறீர்”, போன்ற அவரது காமெண்டிகள் அந்நாளில் யாழ்ப்பாணத்தில் படு பிரபல்யமானவை. ஒருமுறை பலமாக கொட்டாவி விட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை தொடர்ந்தது. ஒரு முறை “சத்யா” கட் உடன் வந்த தயாவ பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கெட்டது இப்பொதும் எம்மிடையே பிரபலமான காமென்ட்.

கொலின்ஸ் மாஸ்ரர் அதே நேரம் விப்ஜியோர் என்ற ட்யூசனை சொந்தமாக வைத்திருந்ததுடன் இங்கு விஞ்ஞானம் படிப்பித்து வந்தார். அவர் ஒரே தம்மில் நாய், எருமை, பண்டி, மூதெவி, வேதாளம் என்று திட்டுவதும் எம்மிடையே ஒரு பாஷன்.

எடிசனில் வகுப்பறைகளைவிட எமக்கு பிடித்த ஒரு இடம் என்றால் அது தெருவோரமாக இருக்கும் மதகுகள் தான். அருகில் உள்ள கடையில் வாங்கிய பீடாவை மென்றபடி அதில் ரோட்டோர ரோமியோக்களாக நாம் கொலு இருப்போம். சக மாணவர்களிடம் பிச்சை எடுத்து பக்கத்தில் இருந்த கடையில் பாணும், வாழைப்பழமும், அஸ்ரா மாஜரின் பக்கட்டும் வாங்கி உண்போம். அதைவிட ட்யூஷனில் இருந்து ஒரு படையாக புறப்பட்டு ஆனைக்கோட்டை மண்பிட்டிகளில் ஏறி நின்று பாடி ஆடி மகிழ்வோம். அந்நேரங்களில் எம்முடன் இருந்த பிரதீஸ் என்ற நண்பன் பின்னர் நவாலி தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல்களில் பலியானான். அவனுடன் கிராம சேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.


பீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு எனது நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்டோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக போகையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. இதன் பின் 98 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சில நாட்களால் எடிசனுக்கு போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்து போய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் 7ம் வாங்கில் சில நொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் ஆனால் பிரகாசமாக அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.

19 comments:

அருணன் said...

அன்புடன்...அருண்மொழிக்கு....

உங்களது இந்த இழமைக்கால நினைவுகளுக்கு...அமெரிக்க மொழியில் சொல்வதானால்..உங்களது பால்ய பயங்கரவாதத்தில் இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.அவற்றை சரியா தெளிவாக நினைவு வைத்திருப்பவர் என்ற வகையில் அவற்றை தொடர்ந்து எழுதவேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே இரண்டாவது மூன்றாவது பதிவில் கவரகூடிய மொழிநடையில் எழுதுகிறாயடா...

எழுது எழுது....

அருணன்

அருண்மொழிவர்மன் said...

நன்றி அருணன்,
என்னை பத்தி எழுத தூண்ட் விட்டவன் நீ, எனது முதல், முழு விமர்சகனும் நீதான். நன்றி

கானா பிரபா said...

வணக்கம் அருண்மொழி

நீங்கள் குறிப்பிடும் பிரதீபனும் (அவுஸ்திரேலியாவின் என் நகரத்துக்கு அண்மைய நகரில் உள்ளான்), வாசனும் (இமயவாசன் என்றால்) இருவரும் என் வகுப்புத் தோழர்கள்.


இந்தப் பெண்ணின் சொந்தத் தம்பி என் நண்பர், யாழில் இன்னும் இருக்கிறார்.

உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் பதியப்படுகின்றனவா என்று பரிசோதிக்கவும். அருமையான நெஞ்சைத்தொடும் பதிவு.

டிசே த‌மிழ‌ன் said...

நல்லதொரு நினைவுப்பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
.....
/வாழ்வை குலைத்தது 97 ஒக்டோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு./
95 என்று நினைக்கின்றேன்.

Anonymous said...

You are doing good.

Very interesting to read.

Regards,

Vaasan.

அருண்மொழிவர்மன் said...

வாசன் எமது அந்த அழகிய பழைய நாட்களை மீட்டு பார்க்கும் ஒரு முயற்சிதன் இது.....

அருண்மொழிவர்மன் said...

டிஜே தமிழன் சொல்லுவதுபோல அது 95 ஒச்டோபர் இல் தான் நடந்தது. 30ம் அல்லது 29 திகதி , மாலை கடந்த பொழுது என்று நினைக்கிறேன்

visakan said...

சைட் நல்ல் இருக்கு. ஒரு கனம் பழைய நினைவுகளை மயில் இறகால் தடவிய மாதிரி இருக்கு. வெந்த உள்ளங்களுக்கு நிச்சயமாக ஆறுதலாக இருக்கும். அதுவும் நம்மைப்போன்ற ஆட்களுக்கு சூப்பர். உன்னி இருக்கும் சில திறமைகள் யாருக்குமெ தெரியாதடா, ஏன் எனக்கே கூட.

அருண்மொழிவர்மன் said...

இந்த பதிவால் எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எனது மூன்று நெருங்கிய நண்பர்களின் உணைவுகளை மயில் இறகால் வருடுவது போல் வருடி விட்டது தான்.
ஒரே தளத்தில் இருந்த நாம் இன்று வெவ்வேறு புலங்களில் இருந்தாலும், உணர்வுகளால் ஒன்றுபட்டிருக்கிறோம்

தமிழ் விரும்பி said...

nichayamaka. athu oru nilakkalam thanda. Athai ninaithal manam thinam ula pokumda. Aanal paditha vankilil awalin peyar iruppathu ippathanda enakku theriyum. Nalla Nanparkaludan irukkum pothu awarkalukku theriyamal kathalikkum pothu oru thiril irukkuthanda. Nee anupavithirukkirai. Athuve periya parisu.

அருண்மொழிவர்மன் said...

இப்பதிவு எம் நண்பர்களின் உணர்வுகளை மீண்டும் கிளறியதில் பெருமகிழ்ச்சி. 96ல் மீண்டும் யாழ் திரும்பியபின் எடிசனை தாண்டும்போது உள்ளே கொளுவியிருக்கும் சரஸ்வதி படத்தை எமது கல்வித்தாய் என்று கும்பிடுவது நினைவுள்ளதா

Gunalan G said...

அற்புதமாக இருக்கிறது நண்பனே... எனது நட்பு உன்னுடன் ஆரம்பமானது இதற்கு சற்று பிந்திய காலம் என்றாலும் என்னுள்ளும் சில நினைவுகளை இது மீட்கத்தான் செய்கிறது.

-குணாளன்

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் இங்கேயும் நீங்கள் சொல்லி இருப்பது மிகச்சொற்பம்தான் நானும் அப்படியே நான் எழுதிய பதிவுக்கு ஊர் நினைவுகள் என்ற லேபிள்தான் கொடுத்திருந்தேன் ஆனால் சம்பவங்களின் சாயலில் எழுதப்பட்டிருப்பதனால் புனைவு என்று மாற்றி கொடுத்திருக்கிறேன்...

உண்மையில் அது நினைவுகளின் சாயல்களில் இருக்கிற விசயம்..

கடைசி வரி கலக்கல்..

பதிவு மனதுக்கு மிக நெருக்கமாயிருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

அந்த இடப்பெயர்வில் பெருமளவு மக்களை தாங்கிய வடமராட்சியில் இருந்தது எனக்கு இன்னும் பல அனுபவங்களை கொடுத்திருந்தது அந்த வயதில் அவற்றை சேகரிக்கிற மனோநிலை இருக்கவில்லை என்று நினைக்கிறேன்..

மங்கலானநினைவுகளாகவே இருக்கிறது முகங்கள் ...

தமிழன்-கறுப்பி... said...

நவாலி - அந்த நேரடிக்காட்சிகளை வீடியோவில் பார்த்த எனக்கே இன்னமும் தூக்கம் பறிக்கிற நினைவுகள் அவை...

அருண்மொழிவர்மன் said...

வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி.

உண்மைதான். அந்த நினைவுகளில் நான் கொஞ்சம்தான் எழுதியுள்ளேன். உண்மையில் அவற்றை முழுவது எழுத வாழ்நாளேஎ காணாது. அவ்வளாவு நினைவுகள். அந்த நாட்களில் எல்லாம் உலகமே அழகாக இருந்தஹ்டு போல எனக்கு தோன்றுகின்றது

கிஷோர் said...

அது ஒரு அழகிய நிலாக்காலம்.
யாழ்ப்பாண எடிசனிலிருந்து கோபி சேரின்ற பாடத்துக்கு மட்டும் கொக்குவில் எடிசனுக்கு வாற எங்கட குறூப்பால, முத்துலிங்கத்திற்கும் பாஸ்கரனுக்கும் பிரச்சனை வந்ததை மறக்கமுடியுமா...?
கொலின்ஸுக்கும், செல்வவடிவேலுக்கும் இடையில நாங்க கொண்டுவந்த “லடாய்களை” மறக்கமுடியுமா...?
அது வாழ்க்கை............இப்ப..?

அதுவொரு “கனா”க்காலந்தான்.ம்.

அருண்மொழிவர்மன் said...

அந்த நாட்களில் ரசிகர் மன்றம் அமைக்கும் அளாவுக்கு கோபி சேரிற்கு நாம் ரசிகர்களாக இருந்தோம். அதேபோல அரவிந்தன் என்ற ஆசிரியரும்....

அற்புதமான நாட்கள் அவை

Tech Shankar said...


Politicians' Drama 2009

Post a Comment