Tuesday, April 7, 2009

தேர்தல் கூட்டணி: ஈழத்தமிழன், திமுக, அதிமுக மற்றும் ஞாநி

வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பேசிப் பேசியே வரலாற்றில் தன் இடத்தை இழந்து கொண்டு வருகின்றான் தமிழன். கனக விசயனின் முடியினை… என்று தொடங்கி தம்புகழ் பாடி, புற நானூற்று வீரம் என்றெல்லாம் பழையதையே மீண்டும் மீண்டும் பேசி மீண்டும் மீண்டும் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்து வளர்ந்தவர்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கூட்டணிகளுடனும், புதிய (கு)யுக்திகளுடனும் மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டனர். திமுக, அதிமுக என்கிற பெரிய முதலைகள் குழப்புகிற குட்டையில் குதித்து மருத்துவர் ராமதாஸ், கலிங்கப்பட்டி வீரன் வைகோ, தமிழ் நாட்டு சேகுவேரா திருமா ஆகியோரும் செய்த குழப்பத்தில் தமிழன் முகமெல்லாம் சேறாக, தேர்தலுக்கு முன்னமே கரும் புள்ளி குத்தப்பட்டுவிட்டான்.


வன்னியில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் சிதறி தமிழர்கள் இறப்பதை வீடியோ ஒன்றில் (திருமா மூலமாக என்று சொல்லப்பட்டது) பார்த்து நா தழ தழக்க கருணாநிதி இதுக்கு பிறகு ஆட்சி இருந்தென்ன, போயென்ன என்றொரு அறிக்கை விட்டு, பதவி விலகல் என்று ஒரு அஸ்திரத்தை பிரயோகிக்க, கருணாநிதி மீண்டும் தமிழின தலைவராக பார்க்கபட்டார், அவரது தமிழ் பற்று பற்றி பலரின் சந்தேகமும் கலைந்தது. சுய மரியாதை சிங்கங்கள் ராமதாஸும், திருமாவும் இன்ன பிறரும் தோள் கொடுக்க 80களின் தொடக்கம் மீண்டும் நினைவு கூறப்பட்டது. இதே நேரம் முன்னை நாள் அன்னை வேளாங்கன்னி, என்றென்றைக்குமான புரட்சி தலைவி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் என்றால் யார்?, போர் என்றால் இறப்புகள் சகஜம் தானே என்றெல்லாம் சொல்லி வரலாறு காணாத புரட்சி செய்ய கருணாநிதி தமிழின தலைவர் என்பது இன்னும் உறுதி செய்யப்பட்டது.


ஆனால் இதற்குப் பிறகு நடந்தது தான் ஒரு திடீர் க்ளைமாக்ஸ். விடுதலைப் புலிகள் ராஜீவை கொலை செய்தனர், சகோதர படு கொலை செய்தனர், கட்டாய ஆட் சேர்ப்பு செய்தனர் என்றேல்லாம் திடீரென்று கருணாநிதி நினைவு கூர்ந்து, தனது ஞாபக சக்தியை நினைவு கூற கருணாநிதிக்கு எதிர்தரப்பு என்பதை மட்டுமே தனது அரசியலாக கொண்ட அன்னை ஜெயலலிதா ஒரே நொடியில் தமிழருக்கான ஆபத் பாந்தவராக அவதாரம் எடுத்து தனது மதிய உணவையே ஒரு வேளை தியாகம் செய்தார். இதை பார்த்து வழமைக்கு ஒரு படிமேலாகவே உணர்ச்சிவசப்பட்ட கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ, எம்ஜிஆர் வழியில் சகோதரி ஜெயலலிதா என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.


இதை பார்த்து இங்கிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் தமது எதிர்வுகூறும் திறமையை காட்டி விமர்சனங்களாக எழுதி தள்ளினார். சொன்னதை செய்பவர் ஜெயலலிதா, எனவே எமக்கான புதிய மீட்பராக அவர் உருவெடுப்பார் என்பது முதல், கலைஞரின் 60 ஆண்டு கால அரசியல் வாழ்வின் பிழைகள் வரை எல்லாம் மீள் பரிசீலனை செய்யப்பட்டன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு கொள்வதைவிட கேவலமானது என்று அறிக்கை விட்ட ராமதாஸ் கண்ணில் திடீரென ஜெயலலிதா மீது சகோதர பாசம் உருவாக, 19 மாத காலம் தன்னை உள்ளே வைத்திருந்த அம்மாவுடன் 10 மாதம் உள்ளே வைத்திருந்த அம்மாவின் சொல்லை மீறி கூட்டணி வைத்த வைகோ அன்னை ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார். மதவெறியும், பாசிசமும் தன்னிரு கண்ணென போற்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து கம்யூனிசத்துக்கான புதிய விரிவுரைகளை தோழர்கள் எழுத தொடங்கிவிட்டனர்.


வழமை போல ஏட்டிக்கு போட்டியாக திமுகவும் தன் பக்க பித்தலாட்டத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டது. தமிழ் நாட்டில் காங்கிரஸை வேரோடு அறுப்போம் என்று அறுதி இட்ட திருமா திமுக கூட்டணியில் தான் உள்ளேனா, இல்லையா என்று கருணாநிதி சொல்லவேண்டும் என்று கேட்க தன் பக்தனை கவர்ந்தாற் கொள்ளும் கலியுக கண்ணனாக கருணாநிதியும் அவருக்கு அருள் பாலித்தார். தோடுடைய செவியன் பாடிய ஞானக் குழந்தையாக கருணாநிதி புகழ் பாடிய திருமா தமிழின தலைவர் கலைஞருடன் கூட்டணி வைப்பதில் மகிழ்வடைகின்றேன் என்று சொல்லி தன் பக்தியை மெய்ப்பித்தார். இலவச விளக்கவுரையாக தனக்கு திமுகவுடன் தான் கூட்டணி என்றும், திமுக தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் தன் நிலையை தெளிவு செய்தார். இது பற்றி தனது ஓ பக்கங்களில் ஞாநி இதே அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நின்று போட்டியிடலாம் என்று ஒரு யோசனையை கிண்டலாக சொல்லியிருந்தார். ஞாநியின் சில கருத்துகளில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அவரது அரசியல் விமர்சனங்கள் காத்திரமானவை. அவற்றில் இருக்கும் வேகமும் வீச்சும் அவரை எதிர்ப்போரால் கூட மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படுபவை. இது போல சாரு நிவேதிதாவும் தேர்தல்: மாஃபியாக்களின் திருவிழா என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இரண்டையும் படித்துப்பார்ப்பது அவசியம்.


இது பற்றியெல்லாம் கவலையில்லாமல் வெகுஜன பத்திரிகைகளும் ஊடகங்களும் ”தளபதி சூரியனுக்கு, தல இலைக்கு” என்று சினிமாக் கொட்டகைக்குள் தமக்கான அரசியல் தலைவர்களை தேடப் புறப்பட்டுவிட்டனர். கல்விக்கண் திறந்த படிக்காத மேதை, கர்மவீரர் காமராஜர் என்று முழங்கி அதனால் தான் அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்கிறோம் என்று சினிமாவில் வசனம் வைப்பார்கள். அதற்கு நன்றியாக இப்போது அரசியல்வாதியாக ஒரே தகுதி சினிமா உலகில் இருப்பதுதான் என்றாகிவிட்டது. இல்லாவிட்டால் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்ததை விட பல மடங்கு பெரிதாக ரம்பா – கருணாநிதி சந்திப்பு பெரிதாக செய்திகளில் வராது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பிழை என்று சொல்லவில்லை, ஆனால் அது ஒன்றே அரசியலுக்கான தகுதி என்றாகிவிடாது என்றுதான் சொல்லுகின்றேன். விஜயகாந்திடம் ஒரு முறை நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்க நான் ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுத்தேன், அன்ன தானம் செய்தேன், நான் மதுரைத்தமிழன், பலருக்கு கல்வி கற்க உதவினேன் அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என்று சொன்னார். இது சொல்லும் நீதி: நிறைய பணத்தை சனத்துக்கு வீணாக்கி விட்டேன், அதை வட்டியும் முதலுமாய் வசூலிக்க அரசியலுக்கு வந்தேன்.


தையல் மெஷின் கொடுப்பதும், நோட்டுப் புத்தகம் கொடுப்பதுதான் அரசியலுக்கான ஒரே தகுதி என்றால் இவர்களை விட சமூகப் போராளிகள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களை கூப்பிட வேண்டியது தானே? சமூக சேவை என்ற ஒரே காரணத்தால் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயையே காலில் விழ வைத்தாரே ஒரு தமிழ்ப் பெண், அவரது பெயராவது நினைவிருக்கின்றதா? அவரை யாராவது அரசியலுக்கு அழைத்து உண்ணாவிரதம் இருந்தீர்களா???? யாராவது ஒரு பேராசிரியரை??? ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் கோபிநாத் ஒரு மனிதரை காட்டி இவர் யாரென்று யாருக்காவது தெரியுமா என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் கேட்க ஒருவருக்குக் கூட தெரியவில்லை. ஆசிரியர்கள் நலனுக்காக போராடி பல முறை சிறை சென்ற பேராசிரியர் கல்யாணி இவர்தான் என்று கோபிநாத் அறிமுகம் செய்ய பேராசிரியர் கல்யாணி கண்களில் நீர். இது ஆனந்த கண்ணீரா...??? ஏன், ஒரு எழுத்தாளரையாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டீர்களா?? இப்போது ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சி போன்றவர்கள் அரசியலில் நுழைந்துள்ளார்கள். இவர்களால் ஏதாவது சமுதாய மாற்றம் வருமா என்று சற்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும். கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி ஒரு எழுத்தாளர் அரசியலில் இருக்கின்றார் என்று கனிமொழி சில நம்பிக்கைகளை உருவாக்கியிருந்தார். ஆனால் இந்த நம்பிக்கைகளை எல்லாம் சிதறடிக்கும்படி கவியரங்கங்கள் என்று சொல்லப்படும் கலைஞர் புகழ் அரங்கங்களில் வாலி, வைரமுத்து, பா. விஜய் எல்லாம் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. “நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்று வித்தக கவிஞர் பா. விஜய் ஒரு முறை வாசிக்க கைதட்டல் காதைப் பிளாந்தது. மீண்டும் மீண்டும் கேட்டேன். இதற்கு ஏன் இந்த கைதட்டல் என்று இன்றுவரை விளங்கவில்லை. சரியான விளக்கம் யாரும் சொன்னால் கம்பராமாயண அரங்கேற்றத்துக்கு அடுத்ததாக புகழ் பெற்ற இவரது பத்து புத்தகங்களின் அரங்கேற்ற நிகழ்வின் ஒளி நாடா அனுப்பி வைக்கப்படும்.


சிலர் சொல்வார்கள் எம் ஜி ஆர் திரையுல்கை சார்ந்தவர் தானே. அவர் எமக்கான பெற்காலத்தை உருவாக்கித் தரவில்லையா என்று. இதற்கு எனது முதலாவது பதில் எம்ஜிஆர் திரை உலகத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தனது திரையுலக கவர்ச்சியை காட்டவில்லை; மேலும் அவர் தனக்கு ஆலோசகராக வைத்திருந்த பலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். இரண்டாவது பதில், எம்ஜிஆர் ஆட்சி பொற்காலம் என்பது முழுக்க முழுக்க உண்மையில்லை. எம்ஜிஆர் ஆட்சிக்கும் கலைஞர் ஆட்சிக்கும் வித்தியாசம் அப்போது ரவுடிகளும் திருடர்களும் அரசியலுக்கு வருவது பற்றி விகடன் கார்ட்டூன் போட்டுவந்தது, இப்போது சினிமா நடிகர்களும் நடிகைகளும் ஆட்சி அமைப்பது பற்றி கார்ட்டூன் போட்டு வருகின்றது.


இந்த தேர்தலில் அழகிரி நேரடியாக களத்தில் இறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த தேர்தலின் பரிணாம மற்றும் பரிமாண வளர்ச்சி எல்லாருக்கும் உறுதியாகிவிட்டடு. அனேகமாக காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிய எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு தமிழக வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்படலாம். அதிமுக கூட்டணி வெல்லுமிடத்தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி விவாகரங்கள், தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டமை, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விபரங்கள் தோண்டியெடுக்கப்பட்டு திமுகவின் பெருந்தலைகள் சிறை செல்லலாம். கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா மாற்றாந்தாய் மனப்பாங்கு காட்டுகின்றது என்று உடன் பிறப்புக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பி கடிதம் எழுதலாம். ஜெயலலிதா பிரபாகரன் கைது செய்யப்படவேண்டும், அதே நேரம் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசியல் தீர்வு காணப்படும் என்று திருவாய் மலர்வார். திமுக வெல்லுமிடத்து இந்திய இறையாண்மை கட்டிக்காக்கப்படும். தமிழர் என்ற அடிப்படையில் கருணாநிதி – ராமதாஸ் உறவு மலரும். உதயநிதியின் மகனுக்கு திமுகவின் குழந்தைகள் அணியின் தலைவர் பதவி கட்சியின் ஏகமனதான தீர்மாணத்தின்படி வழங்கப்படும். ஜெயலலிதா சில மாதங்கள் கொடநாடு விஜயம் புரிவார். மனுஷ்யபுத்திரன் எழுதியபடி ஈழத்தமிழருக்கு சில ஆயிரம் சவப்பெட்டிகளும், ஒப்பாரிகளும் வழங்கப்படும். அடிக்கடி ஞாநி வலியுறுத்தும் 49 “0” பிரிவு ஒரு தொகுதியிலேனும் வென்றால் மாத்திரம் தமிழனும், பெரியார் சொன்ன பகுத்தறிவும் வெற்றிபெறும்.


***வாஜ்பாயை காலில் விழவைத்த சமூக சேவகியின் பெயர் சின்னப்பிள்ளை

40 comments:

ilayadhasan said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ! வாழ்த்துக்கள் !

நானாக நான் said...

அத்தனையும் உண்மை! அரசியல் தலைவர்கள் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில், தோற்றுக்கொண்டு இருப்பது மக்கள் தான் எப்பொழுதும்!!!

Sivakumar said...

Superb! Hats off!!

Anonymous said...

good post...

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் இளையதாசன்

முதன் முறையான பின்னூட்டம் என்று நினைக்கின்றேன்

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் சிவகுமார்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் நானாக நான்
//தோற்றுக்கொண்டு இருப்பது மக்கள் தான் எப்பொழுதும்!!!
//

உண்மை. இவர்கள் பேசி பேசி கழுத்தறுத்ததால் இப்பொதெல்லாம் யாராவது அழகுதமிழில் பேச வெளிக்கிட்டாலெ பயமாக இருக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அழகுதமிழ் என்ற சொல் கூட கிண்டலாகிவிட்டது

Lenin said...

completely true

Anonymous said...

“நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்றால் சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்,உமது தேர்தல் கூட்டணி கட்டுரையில் வரும் அனைத்து அம்சங்களும் உண்மை என்பதற்காக இதை இப்பகுதியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் உமது காலில் விழவேண்டும் என எதிர்பாப்பது வாக்கு போடும் மக்களின் கல்வி/கலவி அறிவுகளுடன் சம்மந்தப்பட்டது

தமிழ் விரும்பி said...

சும்மா 'நச்' ன்னு இருக்கு. கூத்தாடிகள் பற்றிய ஒரு அருமையான பதிவு. அவர்களை நினைக்கும் போது அருவருப்பாக இருக்குது. இவர்கள் எல்லாம்....சே வேணாம் அருண்மொழிவர்மன் பிழைச்சு போகட்டும். இந்தியா உணரும். அப்போது எல்லாம் புரியும்.

கிருஷ்ணா said...

//இது சொல்லும் நீதி: நிறைய பணத்தை சனத்துக்கு வீணாக்கி விட்டேன், அதை வட்டியும் முதலுமாய் வசூலிக்க அரசியலுக்கு வந்தேன்.//

இறுதியாக வந்த பல திரைப்படங்களில் ஏற்பட்ட நட்டத்தையும் ஈடுசெய்வதற்காக இருக்கலாம்.

அரசியல்வாதிகள் காலத்துக்குக்காலம் அடிக்கும் குத்துக்கரணங்களை நன்கறிந்தும், அதற்கேற்றாற்போல ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்களும், அவர் வந்தால் எம்மைக்காப்பார், இவர் வந்தால் எல்லாம் நடக்கும் என்று தன்னைத்தவிர மற்ற எல்லோரையும் நம்பும் நம் தமிழ்மக்களும் இருக்கும்வரை, இந்தக் கும்மாளங்கள் தொடரும்...

//Anonymous said...
“நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்றால் சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்//

இந்த நகைச்சுவைக்காகவே கைதட்டியிருப்பார்களோ???

துர்க்கா-தீபன் said...

//Anonymous said...
“நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்றால் சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்//

இதுகூடப் புரியாம நாம திருப்பி திருப்பி வீடியோவப் பார்த்திட்டிருக்கம்.. பாருங்க தமிழ் மகா சனங்க எப்பிடியெல்லாம் தெளிவா புரிஞ்சுக்கிறாங்க. (இந்த மாதிரியான மக்கள் தெளிவுல தான் எல்லா கூட்டணிகளும் மிளகாயும் அரச்சு மில்லும் கட்டுறாங்க..)

அருண்மொழி ஒரு பொங்கல் நகைச்சுவை பட்டிமண்டபம் ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டு T.R. "அரைச்ச மாவ அரைப்போமா? துவைச்ச துணிய துவைப்போமா?" பாடலுக்கு அர்த்தம் சொன்ன மாதிரியில்ல இது இருக்கு..

பதி said...

அருண்மொழிவர்மன்,

நல்ல அலசல். தமிழ்கூறும் நல்லுலகில் கேட்கவிரும்பும் கேள்விகள் அனைத்தையும் கேட்டுள்ளீர்கள். ஆனால், பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.

//அடிக்கடி ஞாநி வலியுறுத்தும் 49 “0” பிரிவு ஒரு தொகுதியிலேனும் வென்றால் மாத்திரம் தமிழனும், பெரியார் சொன்ன பகுத்தறிவும் வெற்றிபெறும்.//

இது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒரு பேராசை. தமிழக சராசரி வாக்களனிடம் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்க கோருவதே நடக்காத விசயம். அப்படி இருக்கையில் இது போன்ற விசயங்களை இன்னும் மின்னனு வாக்குப்பெட்டியில் கூட சேர்க்க விடாது எமது அரசியல்வியாதிகள் பார்த்துக் கொண்டுள்ள சூழ்நிலையில் 49 O விற்கான சாத்தியக் கூறுகள் அருகில் இல்லை.

//Anonymous said...
“நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்றால் சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்//

அவர்கள் தான் வாங்கிய காசுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லால் பேசுறாங்கன்னா, எப்படி இப்படி எல்லாம் கூச்சமில்லாமல் இணையத்தில் இது போன்ற முகமற்றவர்களால் எழுத முடிகிறதோ தெரியவில்லை... :(

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் லெனின்
நன்றிகள்.

உங்களாது மக்கள் நலம் சார்ந்த பல கருத்துக்களை 14 ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டவன் நான்..

நன்றிகள் லெனின்

ரங்கன் said...

//ஆசிரியர்கள் நலனுக்காக போராடி பல முறை சிறை சென்ற பேராசிரியர் கல்யாணி இவர்தான் என்று கோபிநாத் அறிமுகம் செய்ய பேராசிரியர் கல்யாணி கண்களில் நீர்.//

கல்யாணி பள்ளியில் படித்தபோது ஒரு சிறுதவறுக்காக அவரையும் சகமாணவியையும் இணைத்து தோப்புக்கரணம் போடச்சொன்னதால் தான் மிக அவமானமாக உணர்ந்ததை நினைவு கூறும்போதுதான் கண்கலங்கினார். அறிமுகப்படுத்தும்போது அல்ல.

மன்னிக்கவும். தகவல் பிழைகளை தவிர்த்து பதிவு எழுதக் கோருகிறேன்.

அருண்மொழிவர்மன் said...

// சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்,//

வணக்கம் அனாமி,

நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. எது போல என்றால், முன்பொருமுறை முக்காலா முக்காப்பலா பாடல் எந்த அர்த்தமும் இல்லாமல் எழுதப்பட்டது என்று குற்றம் சொல்லப்பட்டபோது, முக்காலா என்பது முக்காலமும் உணர்ந்தவனே என்றும், முக்காப் பலா என்றும் பலாப் பழத்தின் ஒரு நிலையில் தரும் சுவை பாஒன்று சுவைப்பவளே என்று ஒருவர் அர்த்தம் சொன்னார். இது போன்ற தமிழ் மேதைகள் நிச்சயம் தேவை

பாரதி.சு said...

நன்றே சொன்னீர் நண்பரே!!!
என்ன செய்வது பதில் தெரிந்தும் விடையளிக்க முடியாக் கேள்விகள் நீர்( நாம்) கேட்ட(ப)து...
வெறுத்தே போய்விட்டது தமிழக தலைவலிகளின் சந்தர்ப்பவாதம் கண்டு.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் தமிழ் விரும்பி
//கூத்தாடிகள் பற்றிய ஒரு அருமையான பதிவு. அவர்களை நினைக்கும் போது அருவருப்பாக இருக்குது. இவர்கள் எல்லாம்....சே வேணாம் அருண்மொழிவர்மன் பிழைச்சு போகட்டும். இந்தியா உணரும். அப்போது எல்லாம் புரியும்.
//

இதில் ஒரு சின்ன க்ருத்து என்ன என்றால் இப்படியானவர்கள் பற்றி இந்தியா மட்டுமல்ல நாமும் உணார் ஏராளமாக உள்ளது. இந்திய அரசியல் வாதிகள் பிச்சை வாங்கும்படி அரசியல் நடத்தும் பலஎ எம்மிடையேயும் உள்ளார்கள். இவர்கள் எல்லார் பற்றியும் இப்படியான விமர்ச்னங்கள் நிச்சயம் எழுப்பப்படவேண்டும்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கிருஷ்ணா

//ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்களும், அவர் வந்தால் எம்மைக்காப்பார், இவர் வந்தால் எல்லாம் நடக்கும் என்று தன்னைத்தவிர மற்ற எல்லோரையும் நம்பும் நம் தமிழ்மக்களும் இருக்கும்வரை, இந்தக் கும்மாளங்கள் தொடரும்...
//

இதை தான் கிருஷ்ணா நான் தொடர்ந்து நெடுங்காலம் சொல்லி வருகின்றேன். எமக்காக இந்தியா குரல் தரவில்லை, ஐ நா குரல் தரவில்லை, அமெரிக்கா குரல் தரவில்லை என்று சொல்வதை தவிர்த்து நாம் மற்றவர்களின் பிரச்சனைக்கு என்றேனும் குரல் கொடுத்தோமா என்று யோசிக்க வேண்டும். புலம் பெயர்ந்து நாம் போராட்டம் நடத்தும் எந்த ஒரு நாட்டின் தேசிய நீரோட்டத்திலும் நாம் இன்னும் கலக்கவில்லை. அப்படி இருக்கும்போது நாம் எழுப்பும் சப்தங்கள் அவர்கள் மத்தியில் சலனங்களை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. எமக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் இந்திய தமிழர்கள், அவர்களை ஏற்றி கொண்டாடும் அதே வேளை நாம் மற்றவர்களின் ஆதரவையும் பெற முயலவேண்டும். இதுவே சரியான முன்னுதாரணம் ஆக அமையும்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அனாமி நண்பரே.

//அழகிரிக்கு ஒரு வேண்டுகோள்....
நீங்கள் மதுரையின் நாடாளுமன்றக்குழு உறுப்பினராகவே ஆகிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கீழ்வரும் உங்கள் தொண்டரடிப் பொடியாழ்வார்களை தாண்டி உங்களை தரிசிக்க முடியுமா?//

அழகிரியின் அரசியல் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு ஆனந்த விகடன் இதழிலேயே இவர்களாது கட்டப் பஞ்சாயத்து கலாசாரம் பற்றி விபரமாக விளாசி இருந்தார்கள். தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப் பட வேண்டிய அளவு கொடுமையான மனிதர் இந்த அழகிரி. அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பெயரை இவனுக்கு வைத்தேன் என்று சொல்வதை நிறுத்தி இவரை கைது செய்து சில மாதங்கள் கடுங்காவலில் உள்ளே தள்ளினாலே மக்களுக்கு பெரும் ஆறுதல் வரும். அவர்கள் தரும் ஆசியினாலேயே மீண்டும் திமுக வெல்ல கூட வாய்ப்புகள் உருவாகும்.

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் துர்க்கா

//பாருங்க தமிழ் மகா சனங்க எப்பிடியெல்லாம் தெளிவா புரிஞ்சுக்கிறாங்க. (இந்த மாதிரியான மக்கள் தெளிவுல தான் எல்லா கூட்டணிகளும் மிளகாயும் அரச்சு மில்லும் கட்டுறாங்க..)

அருண்மொழி ஒரு பொங்கல் நகைச்சுவை பட்டிமண்டபம் ஒன்றில் உணர்ச்சிவசப்பட்டு T.R. "அரைச்ச மாவ அரைப்போமா? துவைச்ச துணிய துவைப்போமா?" பாடலுக்கு அர்த்தம் சொன்ன மாதிரியில்ல இது இருக்கு..
//

அந்தக் கண்றாவிய நானும் பார்த்தேன். அதை விட அற்புதமாக முக்காலா முக்காப்புலா பாடலுக்கான விளக்கம் கூட சொல்லப்பட்டதை கேட்டிருக்கின்றேன். பேசாமல் கம்பனுக்கு அடுத்த கவிச்சக்கரவர்த்திகளாக இவர்க்ளையே நியமிக்கும்படி கருணாநிதிக்கு மனுப்போடலாம் என்று நினைக்கின்றேன்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பதி

//இது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒரு பேராசை. தமிழக சராசரி வாக்களனிடம் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்க கோருவதே நடக்காத விசயம். அப்படி இருக்கையில் இது போன்ற விசயங்களை இன்னும் மின்னனு வாக்குப்பெட்டியில் கூட சேர்க்க விடாது எமது அரசியல்வியாதிகள் பார்த்துக் கொண்டுள்ள சூழ்நிலையில் 49 O விற்கான சாத்தியக் கூறுகள் அருகில் இல்லை.
//

இப்போதுதான் இந்த 49 “0” மக்களிடையே அறிமுகமாகி வருகின்றது. ஆனால் மாற்றம் வர இது ஒன்றுதான் வழி.

தமிழ் நாட்டில் வாக்களிப்போரில் மாணாவர் தொகை மிக குறைய. மாண்வர்கள் தாமும் வாக்களிப்பதுடன், வாக்களிப்பதில் மக்க்ளுக்கு உள்ள உரிமைகள் பற்றி பிற மக்களுக்கு உறுதியளிப்பதின் மூலமே மககளுக்கான அடிப்படை உரிமகளை காக்கமுடியும்

Anonymous said...

அருண்மொழிவர்மன் தனது மொழித்திறனால் முக்கலே முக்காப்பிலேக்கும் ஆக்கிராவிற்கும் முந்தானை முடிச்சு போடுகிறார்....!!! முதலில் " சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்" இதற்கான முரண்வாதத்தை முன் வைக்காமல் கலைஞர் கருணாநிதியை நினைவூட்டுகிறார், தான் சின்னபிள்ளையாக சமூக கட்டுரை கவர்ச்சிகரமாக எழுதுவாராம் அதனால் அவரின் காலில் நாங்கள் விழவேண்டுமாம்==>>அநேகமாக, தேர்தலில் மோசமானவரும் மிக மோசமானவரும்தான் மோதிக்கொள்வார்கள். மோசமானவருக்கு ஓட்டுப் போட்டு, மிக மோசமானவர் வந்து அவரின் காலில் ஒட்டு மொத்த அமைச்சர்களும் விழாமல் பார்த்து கொள்வது உங்கள் கடமை

Anonymous said...

துர்கா....!!!! ஏனாம்மா அரைச்சமாவிற்கும் துவைச்ச துணிக்கும் விளக்கம் கேட்டு தொலைக்கிறீர்கள் அருள்மொழியை இருள்மொழியாக்கி காலம் காலமாக கசக்கி பிழிந்து துவைச்ச துணியாகிய பெண்களின் முலையையும் ஆண்களின் ஆட்டுகல் ஒரு மையத்தை நோக்கி மாறாத்துரத்துடன் இயங்குவதையும் குறிக்கும்==>

துர்க்கா-தீபன் said...

//துர்கா....!!!! ஏனாம்மா அரைச்சமாவிற்கும் துவைச்ச துணிக்கும் விளக்கம் கேட்டு தொலைக்கிறீர்கள்//

யாரைய்யா உங்களிடம் விளக்கம் கேட்டது? T.ராஜேந்தர் சொன்ன விளக்கத்தை தான் நினைவுபடுத்தினேன். நீங்கள் தான் உங்கள் விசாலமான மனதில் இருந்து உதிக்கும் விளக்கங்களால் தொலைக்கிறீர்கள். மற்றும் உங்கள் விளக்கங்கள் எழுத்துச் சூழலில் ஒன்றும் புதிய பூச்சாண்டியல்ல ஓடிவிட. "அடியில் இரத்தம் வந்தது" என்ற செய்திக்கு "அடியில் இரத்தம் வந்ததா?" என்று சிலேடை கேட்ட அன்றைய கோபாலபுரத்து பக்குவங்களும்.. கல்கியின் குடும்ப பெண்கள் எதை எங்கே வைக்கிறார்கள்.. என்ற இன்றைய முரசொலியின் தீர்க்க தரிசனங்களும் புதியவை அன்று தோழரே!, அந்த சித்தாந்த தலைமையை இறையாண்மையின் பாதுகாவல் என்று சொல்லும் உங்களின் மாறாத்தூர இயக்க விளக்கம் கேட்டு வியக்கவும் விலகவும். இழிவு பேசி எதன் வாயையும் அடைக்கலாம் என்ற உங்களின் கருத்தின் மீதான எனது அனுதாபங்கள்.

அருண்மொழிவர்மன் said...

அனாமிகளுக்கு வணக்கம்.

//தேர்தலில் மோசமானவரும் மிக மோசமானவரும்தான் மோதிக்கொள்வார்கள். மோசமானவருக்கு ஓட்டுப் போட்டு, மிக மோசமானவர் வந்து அவரின் காலில் ஒட்டு மொத்த அமைச்சர்களும் விழாமல் பார்த்து கொள்வது உங்கள் கடமை
//

நன்றிகள் மோசமானவர் என்று நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த தலைவரை சொன்னதற்கு.

மேலும்
//முக்கலே முக்காப்பிலேக்கும் ஆக்கிராவிற்கும் முந்தானை முடிச்சு போடுகிறார்....!!//
நீங்கள் பா. விஜய்யின் வரிகளுக்கும் மத ஒற்றுமைக்கும் போட்ட முடிச்சு தான் எனக்கு ஆக்ராவிற்கும் முக்காப்பிலாவிற்கும் முடிச்சு போடலாம் என்ற தன்னம்விக்கையை தந்தது. அதற்கு நன்றிகள். கருணாநிதியை புகழ இப்படியா வார்த்தை வீச்சுகளை அள்ளி வீசுவதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். பெரியாரின் சீடன் என்று அடிக்கடி பெருமை கொள்கின்ற இவர்கள் பெரியாரை கூட தமது வியாபாரங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரியார் பெண்ணுரிமை பற்றி ஓயாது கதைத்தவர். அந்த பெண்ணுரிமைகளை முறு முழுதாக அசிங்கம் செய்தவர்களே இந்த் திராவிட தலைவர்களே. மனைவியும் துணைவியும் புடைசூழ, தஞ்சை மண்ணின் புகழை அன்றைய ராஜேந்திர சோழனின் ஆரம்பகாலங்களை நினைவுபடுத்த முயலும் முட்டாளதனம் இது. சட்ட சபையிலே பாவாடை நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும் என்று தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய ஒரு பெண்ணிடம் பதிலளித்ததை அழகு தமிழ் என்று கொண்டாட முடியும் என்றா சொல்கின்றீர்கள்.

அதுபோல துர்க்கா குறிப்பிட்டுள்ள “அடியில் இரத்தம் வந்ததா?” விவகாரம். அடியில் இரத்தம் வந்ததா என்று ஒரு பெண் முறையிட “அடியில் இரத்தம் வந்ததா?”,”அடியில் இரத்தம் வந்ததா?” என்று கேட்ட வரலாற்றுச் சிறுமையை சிலேடை என்று கொண்டாடி வாழும் விசிலடிச்சான் குஞ்சுகளின் மனப்பாங்கினை எல்லாரிடமும் எதிர்பர்ர்க்காதீர்கள்.

//" சாதி மத வேறுபாடுகளை கடந்து நாட்டின் இறையாண்மையின் பாதுகாவலன் என்று அர்த்தம்"//

சாதி மத வேறுபாடுகளை கலைஞர் எப்போது கடந்தார் என்று நினைக்கின்றீர்கள். பெரியாரின் சீடன் என்று சொல்பவன் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும் கேவலம் வேறு எவரால் செய்யமுடியும்....
சாதியை கடந்தவர் என்கின்றீர்களே...... அப்போது ஏனையா சாதிக் கட்சிகளின் கூட்டணி???? தன் இல்ல திருமணங்களின் போது சாதி புகுந்து விளையாடியபோது எங்கே போயிற்று சாதி மதம் கடந்த சமத்துவ புத்தி....

பங்காளி சண்டையில் சன் டிவி சிக்கியபோது பலியானது அப்பாவிகள் தானே... இப்போது இவருக்கு கண்கள் நனைந்து இதயம் பனித்து விட்டதால் செத்துப் போனவர்களுக்கு நீதி கிடைத்துவிடுமா...........

உங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு நிஜம் இருக்கின்றது. அதற்காக அனாமியாக வந்த் உபின்னூட்டமிட்டு நிஜத்தை மாற்றிவிட முடியாது.....

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் அனாமி
துர்கா....!!!! ஏனாம்மா அரைச்சமாவிற்கும் துவைச்ச துணிக்கும் விளக்கம் கேட்டு தொலைக்கிறீர்கள் அருள்மொழியை இருள்மொழியாக்கி காலம் காலமாக கசக்கி பிழிந்து துவைச்ச துணியாகிய பெண்களின் முலையையும் ஆண்களின் ஆட்டுகல் ஒரு மையத்தை நோக்கி மாறாத்துரத்துடன் இயங்குவதையும் குறிக்கும்==>//

எனது பணியை இலகுவாக்கி பின்னூட்டமிட்ட அனாமிக்கு நன்றி.

மெலும் பாவ மன்னிப்பு என்று ஒரு விடயம் சொல்வார்கள். தன் மன கசடுகளை ஒருவரிடம் சொல்லி தன் அழுக்குகளில் இருந்து விடுவிக்கும் ஒர் செயற்பாடு அது. அதற்கு உங்கள் பின்னூட்டத்தை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள். இனியேனும் ஆரோக்கியமான சிந்தனைகள் உதிப்பதாக

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் ரங்கன்
//அவமானமாக உணர்ந்ததை நினைவு கூறும்போதுதான் கண்கலங்கினார். அறிமுகப்படுத்தும்போது அல்ல//

உண்மைதான். அந்த அறிமுகப் படுத்தலின்போது அவரை யாருமே அடையாஆம் காணவில்லை. அப்போது அதை ஒரு நிராகரிப்பின் வலியாக மட்டுமே புரிந்துகொண்டேன்.. அதன் பின்னர் நீங்கள் சொன்ன விடயமும் நடந்தது.

பிழையை சுட்டிகாட்டியதுக்கு ந்னறிகள். இனிமேல் இப்படி நிகழ்வதை தவிர்த்துக் கொள்ளுகின்றேன்..

ஆதே நேரம் இது நான் சொல்ல வந்த மூலக்கருத்தை பாதிக்கவில்லை என்று சொல்ல விரும்புகின்றேன்

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பாரதி

//என்ன செய்வது பதில் தெரிந்தும் விடையளிக்க முடியாக் கேள்விகள் நீர்( நாம்) கேட்ட(ப)து...//

அப்படி எமது முன்னோர்கள் விட்ட தவறால் எம் கால அரசியல் கூவமாகிவிட்டது. இனியும் நாம் தொடர்ந்து தவறுகள் செய்யாமல் எம் அடுத்துவரும் தலைமுறைகள் தன்னும் சுயத்துடன் வாழும் சந்தர்ப்பாங்களை உருவாக்க வேண்டும். திமுகவின் அடுத்த தலைவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் அழகிரி, ஸ்டாலின் தலைமை வரும்போது இதைவிட மிகப்பெரிய அவலங்கள் நம்முடன் பின்னிப் பிணைந்துவிடும்

Anonymous said...

டி ஆர் பெண்களை தொட்டு நடிக்காத ஒழுக்கசீலர் உங்களைப்போல்..! அவரது விளக்கம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் என் மனதில் உதிர்ந்ததை சொன்னேன் கலைஞரின் சிலேடை வசனங்களை உங்கள் பசுமரத்தாணி மனத்தில் இருந்து உதித்தற்கு நன்றி இதுவும் கலைஞரின் வெற்றி தான், நான் அவரை நேரடியாக விரும்புகிறேன் நீங்கள் மறைமுகமாக, என்னென்றால் பிரபல்ய முகமுள்ள நீங்கள் முகத்துகஞ்சி வேசையாடும் நிலையில் உள்ளீர்கள்..!! ஸாரி துர்கா

Anonymous said...

அருண்மொழிவர்மன் போன்றவர்களின் பார்வையில் இரு அரசியல் வாதிகளையும் தரம் பிரித்தேன் ஸாரி. அருண் நீங்கள் செக்ஸ்சை மறை முகமாக விரும்பும் வகை கலைஞரின் அந்த பேச்சு மட்டும் ஆழப்பதிந்து எத்தனை மணி நேரம் உங்கள் நண்பர்களுடன் விவாதிப்பீர்கள், ஈழ்த்தமிழர்கள் பொதுவாகவே இப்படி தான் என்றால் வெளி நாடு சென்றுமா..?? சாதி மதம் என்பது மக்களிடை ஆழ்ப்பதிந்த விடையம் உங்களுக்கு கலைஞரின் சிலேடைகள் போல், 6 கோடி மக்களை ஆள்பது என்பது சாதாரண விடையம் அல்ல ஈழம் அமைக்க உறுதி பூண்ட போரளிகள் தங்களுக்கு கருத்து வேறுபாடு வந்து தங்களுக்கு தாங்கள் அடித்து செத்ததை விட அடியில் இரத்தம் வந்தா..? ஒன்றும் பெரிதல்ல...!!! இந்த வயதிலும் ஆட்சியை நடத்தும் ஒரு ஆச்சரியமான உயிரியாக கலைஞரை பார்க வேண்டுகிறேன்==> உங்கள் புரிதலில் கலைஞர் ஒரு அரசியல் Stephen Hawking

சாந்தி ரமேஷ் வவுனியன் said...

எமது இனம் செத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்திய நிலைப்பாடும் அரசியலாளர்களின் அசமந்தப் போக்கும் மாறாமல்.....

இப்படியும் ஓர் இனம் இருந்தது என்று எப்போதாவது ஆராட்சி பண்ணப்போகிறார்களோ என்னவோ புரியவில்லை....!!!!

உண்மைகளை அப்படியே உடைத்துப் போட்டிருக்கிறீர்கள்.

சாந்தி

துர்க்கா-தீபன் said...

//டி ஆர் பெண்களை தொட்டு நடிக்காத ஒழுக்கசீலர் உங்களைப்போல்..! அவரது விளக்கம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் என் மனதில் உதிர்ந்ததை சொன்னேன் கலைஞரின் சிலேடை வசனங்களை உங்கள் பசுமரத்தாணி மனத்தில் இருந்து உதித்தற்கு நன்றி இதுவும் கலைஞரின் வெற்றி தான், நான் அவரை நேரடியாக விரும்புகிறேன் நீங்கள் மறைமுகமாக, என்னென்றால் பிரபல்ய முகமுள்ள நீங்கள் முகத்துகஞ்சி வேசையாடும் நிலையில் உள்ளீர்கள்..!! ஸாரி துர்கா//

இதுபோல ஒரு குதர்க்கம் காண்பது மிக அரிது அனானி நண்பரே! இங்கே இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று வாதம் என்பது ஒரு பொருள் குறித்தானது உங்கள் இஷ்டத்துக்கு வளைக்கவும் இழுக்கவும் இது ஒன்றும் உங்களூர் அரசியல் மேடையுமல்ல இங்கே வருபவர்கள் ஒன்றும் அடிப்படை அற்ற முட்டாள்களும் அல்ல உங்களுக்கு பிடித்த பிடிக்காதவை பற்றி ஜால்ரா போட. உங்களுக்கு கலைஞரை நேரடியாக பிடித்திருக்கிறது. நல்லது! அது உங்கள் நிலைப்பாடு. அதற்காக எனது நிலைப்பாட்டை அது நேரடியோ மறைமுகமோ விசுவாசமோ அன்றி விரோதமோ என்று நீங்கள் தீர்மானிக்கதீர்கள். அது வருந்தத்தக்கது. பா.விஜய்க்கு கைதட்டினால் நேரடியான விருப்பம் பரிகசித்தால் மறைமுகமான விருப்பம் என்று நிறுவும் சாத்தியப்பாடு உங்களின் அரைவேக்காடுத்தனத்தின் வெளிப்பாடு அன்றி வேறில்லை.

இரண்டாவது பதில்களும் வாதங்களும் கருத்துகளுக்கானவை ஒரு மக்கள் ஜனநாயகம் குறித்த வாதப் பிரதிவாதங்களிலே நீங்கள் அனாமியாய் இருக்க எந்த அவசியமும் இல்லை. அவ்வாறான ஒரு சூழல் இருக்குமாயின் அது உங்களின் அரசியல் மீதான கேள்வியைத்தான் மீண்டும் முன்வைக்கிறது. மற்றும் உங்களுக்கு துர்கா என்ற "பெயரின்" மீது சுயமைதுனம் கொள்ளவும் சொப்பனங்கள் அடையவும் உள்ள சுதந்திரத்தை யாரும் தடுக்கமுடியாது இதற்கு எதற்கு சாரி?

Anonymous said...

அம்மாடியோவ் துர்க்காவின் கோபம் ஜெ.ஜெ அளவிற்கு போய்விட்டது,கலைஞர் மீது ஏன் இந்த வெறுப்பு.? நான் உங்களை முட்டாள் என்று சொல்லவில்லை உங்கள் புத்திசாலித்தனம் தான் என்னை சுயமைதுனம் கொள்ளவும் சொப்பனங்கள் அடையவும் வைக்கிறது, உங்கள் பெயர் அல்ல அதற்காக ஸாரி, ஆமா ஏன் அரசியலை உள்ளூர் வெளியூர் என்று பிரிக்கறீர்கள் இது உங்கள் மீதுள்ள புத்திசாலித்தனத்தை இழக்க வைத்து இப்பகுதியில் உங்கள் கருத்துக்கு ஜால்ரா போடும் ரசிகர்/ரசிகை களின் முகத்துக்கஞ்சி வேசையாட முயற்சிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தப்பட வைக்கிறது,ஜெ ஜெ விற்கு கோபம் இந்த அளவிற்கு வந்தாலும் இந்த பழக்கம் அவரிடம் இல்லை அதனால் அவரின் கோபம் தணிய செருப்படி வாங்கலாம் ஆனால் உம்மிடம்..??

Anonymous said...

அந்த அனாமியை அக்கிரமத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் மேதைகளின் தமிழ் வற்றி விட்டதா? அல்லது சொல்வதெல்லாம் உண்மையில் சிலது பொய் இருக்கலாம் என மாற்றம் கொண்டுவர கடவது.....!!!!

Gunalan G said...

விமர்சனத்துக்கே தகுதியில்லதவர்கள் இவர்கள் எல்லாம்; விட்டுத் தள்ளுங்கள். மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று இவர்களின் வழியிலேயே மக்களும் ஏமாற்றப் பழகிக் கொண்டால்தான் எதிர்காலத்தில் கஞ்சிக்காவது மிச்சம் வைப்பார்கள்.

Anonymous said...

"துர்கா....!!!! ஏனாம்மா அரைச்சமாவிற்கும் துவைச்ச துணிக்கும் விளக்கம் கேட்டு தொலைக்கிறீர்கள்........"

அடே அனாமி , ஏன்டா உங்க இரட்டை அர்த்த தலைவன் போலவே பேசுகிறாய் ?
இது உன் அம்மா உனக்கு நடத்திய பாடமா ? இல்ல அப்பா அறியாத கடுப்பில திரிவவன
நாயே போடா பொத்திட்டு.

Anonymous said...

please remove the indecent comments from indecent people

Anonymous said...

karunanidhiyin puthiya nakaisuvai partheerkala? :-)

Lavanyan said...

அலசல் அபாரம் அருள்மொளிவர்மா! வாழ்த்துக்கள்!!! மாறவேண்டியவைகளும் உனது எழுத்துக்களைத் தொடர்கின்றன என்பதில் மகிழ்ச்சி. மாறவேண்டியவைகள் என்று அஃறினையில் குறிப்பிட்டதன் அர்த்தம் புரிந்திருக்குமென நினைக்கிறேன். எனது ஆதங்கமெல்லாம் அவை மாறுமா என்பதுதான்! மாற்றங்களை சகிக்க முடியாத மானுடங்கள் அவைகள்...

Post a Comment