சிறுவயதில் கொழும்புவில் இருந்த எனது பெரியப்பா மூலமாக எமக்கு நிறைய புத்தகங்கள் வந்து சேரும். பெரியப்

2
சலனங்கள் தொலைந்த அமைதியான நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடந்து போன நினைவுகளை மீட்டிப் பார்க்கும் சுபாவம் அனேகமாக எல்லாரிடத்திலும் இருக்கின்றது. அண்மையில் வாசித்து முடித்த சில அருமையான புத்தகங்கள் தந்த அமைதிக்கும் / அமைதி இன்மைகளிற்கும் (முக்கியமாக the long way gone வாசித்து முடித்த போது பெரும் அமைதியின்மை ஏற்பட்டது) நடுவே என் சிறு வயதில் வாசித்த சில புத்தகங்களின் நினைவுகள் மீண்டும் மீண்டும் புரண்டு கொண்டிருந்தன. ஆகச் சிறு வயதில் ஒன்று, இரண்டு..... பத்து வரை எண்ணத் தெரியும் என்று பெருமையாக சொல்லியிருக்கின்றோம். பின்னர் உலகிலேயே பெரிய எண் 100 என்று சில காலம் நினைத்திருக்கின்றோம். திடீரென்று ஒருவன் மில்லியன் என்று ஒரு எண் இருக்குதாம். ஒன்றுக்குப் பின்னால 6 சைபராம் என்று சொன்னபோது அவன் ஒரு பிறவி மேதை போன்றே காட்சி தந்தான். அதையும் தாண்டி, சிவபெருமானின் அடியும் முடியுமான இலக்கம் என்று ஒரு இலக்கத்தை சொல்லி இன்னொருவன் பேராச்சரியங்களுக்குள் எம்மை தள்ளினான். இப்போது நினைக்க சிரிப்பாக இருந்தாலும், அந்த வயதில் அது தானே எமக்கான நிஜம். அது போல பால்யத்தில் வாசித்த புத்தகங்கள் எல்லாம் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை இழந்திருந்தாலும் அந்த வயதில் அவை எழுப்பிய உணர்வுகள் நிஜம்.
நான் முதல் முதல் வாசித்த நாவல் கே. டானியல் எழுதிய தண்ணீர். அந்த புத்தகத்தை வாசிப்பதற்கு எந்த வித தகுதியும் இல்லாத 10வது வயதில் அதை வாசித்தேன். மிக ஆழமான வாசிப்புக்குரிய அந்த நாவலின் ஆழத்தை அப்போது அடைய முடியாத

இந்தியப் புத்தகங்களில் தொடக்க காலத்தில் வாசித்தவை ராஜேந்திரகுமாரின் “வரமாட்டியா மம்மி?” என்றா குறு நாவல். இந்தக் கதையின் முடிவு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். இப்பொழுது மீண்டும் ஒரு முறை இதே கதையை வாசிக்கவேண்டும் தேடிவருகிறேன். கிடைக்கவில்லை. அதுபோலவே அகிலனின் கொள்ளைக்காரன், பால் மரக் காட்டினிலே, மு. வரதராசனின் மண் குடிசை, கரித்துண்டு, ரா. கி. ரங்கராஜன் மொழி பெயர்த்த கையில்லத பொம்மை என்ற கதை என்று நிறைய புத்தகங்களை 90 ஆண்டு போர் மீண்டும் வெடித்திருந்த காலப் பகுதியில் வாசித்தேன். இதற்கு முன்னரே 1987ம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் போர் உக்கிரமடைந்திருந்த காலப் பகுதியில் சத்திய சோதனையையும் வாசித்திருந்தேன். அந்த வயதில் (அப்போது 8 வயது) வாசித்து முடித்தேனே தவிர அதில் சொல்லப் பட்ட விடயங்கள் பெரும்பாலும் புரியவேயில்லை. ஆனால் 91,92ல் வெறி பிடித்தது போல ஒன்றன் பின்னர் ஒன்றாக பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பாண்டிமா ராணி, கடல் புறா என்று வாசித்துத் தள்ளியபோது அவை இலகுவாக புரிந்தே இருந்தன. இதனால்தான் முன் கதைச் சுருக்கத்தில் பாலகுமாரன் தான் 13 வயதிலேயே பொன்னியின் செல்வன் வாசித்தேன் என்று ஆச்சர்யமாக சொல்லும்போது இதிலென்ன ஆச்சர்யம் என்றுதான் தோன்றியது. உண்மையில் இலங்கையில் பெரும்பாலான வாசிப்புப் பழக்கம் இருப்பவர்கள் தம் 12 / 13ம் வயதிலேயே கல்கியை வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் கதைக்கும் போது பொன்னியின் செல்வன் வாசித்தோம் என்பதை விட எத்தனை தர்ம் வாசித்தோம் என்றுதான் பேசிக் கொள்வது வழக்கம். உண்மையில் பொன்னியின் செல்வனை அது கல்கியில் தொடராக வந்த போது வரும் சித்திரங்களுடன் பார்ப்பது எப்போதும் ஒரு சுகமான அனுபவ்ம்தான். வர்த்தமானன் பின்னர் மலிவு விலைப் பதிப்பாக பொன்னியின் செல்வனை எந்தச் சித்திரங்களும் இல்லாமல் வெளியிட்டார்கள். சப்பென்றுதான் இருந்தது.
இதற்கு அடுத்த காலகட்டத்தில் அதாவது என் 15வது 16வது வயதுகளில் பாலகுமாரனுக்கு தாவினேன். அந்தக் காலம் சுஜாதாவை தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தகாலம். முதன் முதலாக பாலகுமாரனின் நெல்லுக்கு இறைத்த நீர் புத்தகம் வாசித்ததாய் ஞாபகம். விசாகன் வீட்டில் இருந்

கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் கொழும்புவில் நான் இருந்தபோது பெரியப்பாவுடன் அதிகம் கதைத்து அவருக்கு இருந்த திராவிட இயக்கங்கள் மீதான பற்றால் நான் திராவிட இயக்க புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். கருணாநிதி எழுதிய கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் வாசித்து இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் முரசொலி இணையத் தளத்துக்கு சென்று உடன்பிறப்புக்கு கடிதத்தை வாசிப்பதை தவறாமல் செய்து வந்தேன். உண்மையில் திராவிட இயக்க எழுத்துக்களை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்ததால் எனக்கு ஏற்பட்ட முக்கிய பலன் அதன் போலித்தனங்களை அறிந்து கொண்டது தான். திராவிட இயக்கங்கள் என்று மட்டுமல்ல, நம்பிக்கை அதிகம் வைத்து நாம் கொண்டாடிய அமைப்புகள் பின்னர் எவ்வாறு மக்கள் நலன் என்ற விடயத்தில் இருந்து நீர்த்துப் போனார்கள் என்ற அனுபவத்தை 95/96 காலப் பகுதியில் இருந்து ஈழத்திலும் கண்டு வருகிறேன். அமைப்புகள் எல்லாமே எடுக்கும் முனைவுகளும், முன்னெடுப்புகளுமே தம்மை அமைப்பு ரீதியாக நிலையாக்கவே அன்றி மக்கள் நலனை முன்வைத்தல்ல என்பதை காலம் எமக்கு திரும்ப திரும்ப அனேக ரணங்களுடன் காட்டியே வருகின்றது.
உண்மையில் எனது வாசிப்பு அனுபவத்தில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம் முக்கியம் வாய்ந்தது. கனடா வந்த ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு தோழி இருந்தாள். அவளுடனான நட்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஈழத்து வாசிப்பு அனுபவத்தின் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த பால

இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாட்களில் என் வாசிப்பு மன நிலை முற்றிலும் மாறி இருக்கின்றது. அல் புனைவுகளை வாசிப்பதில் தான் அதிகம் ஈடுபாடு வருகின்றது. அ-புனைவுகளை வாசிப்பதன் முக்கியத்துவத்தை நண்பர் அந்நியனும் அதிகம் வலியுறுத்தி இருந்தார். போதிய நேரம் கிடைக்காத போதும், கிடைக்கும் நேரமெல்லாம் வாசிப்பு அனுபவமாக மாற்றியே வருகின்றேன். பெரும் எதிர்பார்ப்புடன் வாசிக்கும் சில எழுத்துகள் ஏமாற்றங்களாய் முடிவதும் உண்டு. ஜி. நாகராஜன் மறைந்த பின்னர் அவரது கையெழுத்தில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டதான முன்னுரையுடன் அவரின் சிறுகதைகள் தொகுப்பில் இருக்கும் “ஆண்மை” கதை முழுக்க முழுக்க ஏமாற்றமாயே போனது. குடும்பத்தின் ஏழ்மைக்காக தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கும் பெண்ணின் நிலை அறிந்து அவளை விட்டுச் செல்வதுதான் ஜி. நாகராஜன் சொல்லும் ஆண்மையோ என்றே தோன்றியது. ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்து கிடைப்பது வாழ்க்கை மட்டுமல்ல, இலக்கியமும்தான்.
என் நட்சத்திர வார அறிமுகத்தில் சொன்னது போலவே
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
- Robert Frost