Wednesday, November 26, 2008

தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம்

தமிழ் சினிமாவுக்கென்று நிறைய கல்யாணகுணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது செண்டிமெண்ட். இந்த சென்ரிமெண்ட் மசாலா கலக்கப்படாத எந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறமுடியாது என்பது அதன் சாபக்கேடுகளில் ஒன்று. அதிலும் உறவு முறை சித்திகரிப்புகளில் தாய்ப்பாசம், காதல், சகோதரப்பாசம், நட்பு, எஜமான விசுவாசம், தேசப்பற்று, சாதிப்பற்று என்று வரும் பட்டியலில் மிகத்தொலைவிலேயே தந்தையர் பாசம் இருக்கின்றது. தாயை முன்னிலைப்படுத்துவதாலேயே பெண்களை கவரலாம் என்கிற ஒரு உத்தி இருப்பது இதற்குகாரணமானாலும், இதனை முன்னிலைப்படுத்தி தந்தையரை சித்திகரிக்கும் விதம் மிகுந்த விசனத்துக்குரியது. அதிலும் ஹீரோயினின் தந்தை என்றால் கேட்கவே வேண்டாம் 90% அவர்தான் வில்லன். அதனால் ஹீரோவுடன் மோதி, “நீ இவளோட அப்பன் என்கிற ஒரே காரணத்துக்காக உன்னை உயிரோட விடறேன்” என்று விரலை சொடுக்கி ஏகவசனத்தில் ஹீரோ பேசுவதை கிழிந்த சட்டை, உடலெங்கும் அப்பிய புழுதி மற்றும் காயங்களுடன் கேட்கவேண்டும். கதாநாயகனின் அப்பாவுக்கு கதாநாயகனிடம் அடிவாங்கும் சந்தர்ப்பம் வராதே தவிர அவரது இருப்பு பெரும்பாலும் படங்களில் உணரப்படுவதேயில்லை.

ஒரு பிள்ளை ஆரோக்கியமாக வளர தந்தை – தாய் உறவு நிலை நன்றாக இருக்கவேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் இயங்கவும். ஆனால், தாயை போற்றுவதற்காக தமிழ் சினிமாவில் தந்தையர் பெரும்பாலும் காதலியை கர்ப்பினியாக்கிவிட்டு ஓடுபவர்களாகவோ (மிஸ்டர் பாரத்) குடிகாரர்களாகவோ, வேறு பெண்களுடன் தொடர்புள்ளவர்களாகவோ காட்டப்படுவது வழக்கம். இதற்கு எதிர்மாறாக நல்ல தந்தையை காண்பிக்கிறேன் பேர்வழி என்று தந்தையரை அளவிற்கு மிஞ்சிய ஏமாளிகளாக மகன்களால் பிற்காலத்தில் கைவிடப்படுபவர்க்ளாக காண்பிப்பது இன்னொரு மிகை (ஒன்பது ரூபாய் நோட்டு, சிவாஜியின் பல படங்கள்). போனால் போகட்டும் என்று ஒரு நகைச்சுவை பாத்திரமாக (ப்ரியமுடன்) அல்லது எது செய்தாலும் மகனை கரித்துகொட்டும் ஒருவித சைக்கோ காரக்டராகவோ வருவது (எம்டன் மகன், தனுஷின் படங்கள்) இன்னொரு வகைபடங்கள். இவை எல்லாவற்றையும் தவிர்த்து தந்தை – மகன் உறவை ஒரு யதார்த்தமான முறையில் வெளிக்காட்டிய படங்களை விரல் விட்டு எண்ணலாம். அப்படியான சில படங்கள் பற்றிய பார்வை இது.

கிங்

பெரியளவி
ல் வெற்றி பெறாத படம். விக்ரம் – சினேகா இணைந்து நடித்த இப்படத்தில் நாசர் – விக்ரம் முறையே அப்பா மகனாக நடித்தனர். ஹாங்காங்கில் இருவரும் இருப்பதாக வரும் காட்சிகளில் இருவரதும் உறவுமுறை நன்றாக காட்டபட்டிருக்கும். நோயால் தாக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் விக்ரத்திடம் அதை மறைத்து தனக்கு வருத்தம் என்று நாசர் நாடகமாடும் படம். உண்மையை விக்ரம் உணரும் கட்டங்களில் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். அவர் நடித்த படங்களிலேயே அற்புத நடிப்பை கொண்ட சில காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன. இயக்குனர் சாலமனின் (கொக்கி, லீ) முதல் படம் இது. இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி (வைரமுத்து – தினா) 3 பாடல்களை ஆல்பமாக தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளிபரப்பினார்கள்.


லவ் டுடே

இதுவும் ஒரு அறிமுக இயக்குனரின் படம். பாலசேகரன் இயக்கிய படத்தில் ரகுவரன் – விஜய் தந்தை மகனாக (விஜய் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முற்பட்ட காலம்) நடித்திருந்தனர். இவ்வளவு அன்பான, நட்பான அப்பா எல்லார் கனவிலும் நிச்சயம் வந்திருக்கும். அதிலும் காலையில் அவசர அவசரமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நிற்கும் சுவலக்‌ஷ்மியை பார்க்க செல்லும் விஜயை ரகுவரன்
“காலங்காத்தால எங்க இவ்வளாவு அவசரமாக போற” என்று கேட்கும் ரகுவரனிடம் விஜய் “கம்பியூட்டர் க்ளாஸ்க்கப்பா” என்று சொல்ல அவர் சென்ற பின் (தனக்கேயுரிய) புன்னகையுடன் “நான் பாக்காத கம்பியூட்டர் க்ளாசா! எந்த பொண்ணு பின்னாடி சுத்திறானோ” என்று ரகுவரன் சொல்லும் காட்சி அற்புதம். அதேபோல மீன் தொட்டிக்கு அருகில் வைத்து விஜய்க்கும், சாப்பாட்டு மேசையில் வைத்து அவர் நண்பர்களுக்கும் ரகுவரன் அறிவுரை சொல்லும் காட்சிகள் நன்றாக இருக்கும்.

தவமாய் தவமிருந்து

படத்தின் முற்பாதியில் ராஜ்கிரனை தியாகி ரேஞ்சிற்கு கட்டமைத்த சேரன் பிற்பாதியில் சற்று யதார்த்ததுக்கு திரும்பியிருப்பார். கஷ்டப்பட்டு சேரனை படிப்பிக்க அவர் காதலியுடன் தகப்பனிடம் வாங்கிய பணாத்துடன் ஊரைவிட்டு ஓடி பின் ஓரளவு நல்ல நிலையில் மீண்டும் பெற்றோரை வைத்து போற்றுவதாகவரும் கதை. சேரனுக்கு பிள்ளை பிறந்தது தெரிந்து வரும் ராஜ்கிரண் அவருக்
கு பண உதவி செய்யும் காட்சியிலும் அதேபோல சேரனின் வீட்டை பார்த்து அடு பற்றி சேரனிடம் கேட்கும்போது சேரன் கடனில் வாங்கிய வீடென்று சொல்ல, “எப்பவும் நம்ம வருமானத்துக்குள்ள வாழ பாக்கனுமப்பா” என்று சொல்வதும் உணர்வுபூர்வமான காட்சிகள். படத்தின் பிற்பகுதியில் வசனமேயில்லாமல் பிண்ணனி இசையுடன் 10 நிமிடங்களுக்கு மேலாக வரும் காட்சி ஒரு கவிதை. அதுபோல ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு அம்மா அப்பா பாடலின் காட்சியும் நல்ல ரசனையுடன் படமாக்கப்படிருக்கும்.

உல்லாசம்

இப்படத்தில் அஜித்தும் விக்ரமும் மற்றவர்களின் தந்தையருடனே (ரகுவரன், பாலசுப்ரமணியம்) நெருக்கமாக இருந்தாலும் அவர்களின் உறவுமுறை நன்கு
காட்டப்படும். தனக்கு தெரிந்த கவிதை, பாடல், என்று பாலா விக்ரத்துக்கு சொல்லிக்கொடுத்து அவரை மென்மையாக வளர்க்க, ரகுவரன் தனக்குத் தெரிந்த அடி தடி, அதிரடிகளை அஜித்திற்கு சொல்லி வளர்க்கிறார். ரகுவரனின் அடியாள ஒருவர் இறக்க அந்த அடியாளின் கதிதான் அஜித்திற்கும் ஏற்படும் என்று விகரம் ரகுவரனிடம் கடுமையாக சொல்ல ரகுவரன் தனது ரவுடிசத்தை மூட்டைகட்ட முடிவெடுப்பார். இந்த சந்தர்ப்பத்தில் “சின்ன வயசில குரு ...” என்று தொடங்கி ரகுவரன் பேசும் வசனமும், மஹேஸ்வரியை விக்ரமும் காதலிப்பதால் அவரை விட்டு விலகும்படி அஜித்திடம் பாலா கேட்கும் காட்சியும் சிறப்பாக அமைந்தபடம். பாலகுமாரனின் வசனமும் ஜேடிகெர்ரியின் இயக்கமும் நன்றாக இருந்தும் சரியான திரையரங்குகளில் திரையிடப்படாமல் அமிதாப்பின் AB Corporationஐயே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வைத்தபடம்.

காதல்கவிதை

ஜனாதிபதி விருது பெற்ற அகத்தியனின் இயக்கத்தில் மணிவண்ணன் – பிரஷாந்த் முறையே தந்தை மகனாக நடித்தபடம். தந்தை மகன் உறவை இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம் என்றபோதும் சில காட்சிகள் நன்றாக இருக்கும். மணிவண்ணன் தொழிலதிபர். மனைவி அம்பிகா. மகன் பிரஷாந்த். பிள்ளையும் கணவனும் எப்போதும் வீட்டில் நிற்காததால் அம்பிகா எந்நேரமும் சண்டையிட்டுகொண்டே இருப்பார். பின்னர் மணிவண்ணன் இதை உணார்ந்து அவரை மாற்றுவார். இதில் வீட்டில் அமைதி இல்லை என்று வெளியே திரியும் பிரஷாந்தை மணிவண்ணன் கையேந்தி பவனில் வைத்து காணும் காட்சி சிறப்பு.

கிரீடம்

பிரியதர்ஷனின் மலையாளாத்திரிப்படத்தின் த
மிழ் படம் இது. ராஜ்கிரண் – அஜித் தந்தை மகனாக நடிக்க புதுமுக இயக்குனர் விஜை சிறப்பாக இயக்கினார். தன் மகன் போலிஸ் ஆகவேண்டுமென்ற தந்தையின் கனவை யதார்த்தமாக அணுகியிருந்தார். அதனாலோ என்னவோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை. மற்றும்படி தன் மகனை ஒவ்வொரு கட்டத்திலும் தாங்கும் ராஜ்கிரணின் அணுகுமுறையும், போலீசாக இருந்தபோதும் குடும்ப அங்கத்தவர்களிடம் அவர் காடும் மென்மையும் என்னை கவர்ந்தது. அஜித்தும் மென்மையாக, ஒரு matured கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருப்பார்.

வாரணம் ஆயிரம்

அண்மையில் வந்த படம் என்பதால் இதன் வெற்றி தோல்வி பற்றி இப்ப்ப்து ஒன்றும் கதைக்க முடியாது. ஆனால் படம் மிக மெதுவாக செல்கின்றது என்ற பொதுவான கருத்து உள்ளது. என்னை பொறுத்தவரை தந்தைக்கு தியாகி என்றோ, அப்பாவி என்றோ வேஷம் கட்டாமல் தன் மகனுக்கு ஒரு role model ஆக இருக்ககூடிய தந்தையை படத்தில் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல்
”முதலடி வாங்கியவன் முடிவுக்கு அஞ்சுவதில்லை
வாங்கும் வரை வாதங்கள், வாங்கியபிறகு எல்லாம் வே
தங்கள்” என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையை அனுபவங்களின் தொகுப்பாக, எவரையும் புனிதராக்காமல் சொல்லும் படம். படத்திலேயே அப்பா சூர்யா சொல்வதுபோல life has to go on என்பதை மீண்டும் மிண்டும் வலியுறுத்துகிறபடம். பத்திரிகை விமர்சனங்களையும் மற்றோர் கருத்துக்களையும் மட்டும் கேட்காமல் படத்தை ஒருமுறை அரங்கில் பார்க்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இதுபோல இன்னும் சில படங்கள் வெளியாகியிருக்கலாம். அவற்றை தெரிந்தவர்கள் அறியதந்தால் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் நான் எடுத்துச் சொல்லப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் மற்றைய உறவுகளைவிட இந்த உறவு முறை மிக குறைந்த எண்ணிக்கையில் திரைப்படமாக்கப்பட்டமையே.

17 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அழகான கட்டுரை. இப்படியெல்லாம் கேவலப் படுத்தக்கூடாது என்றுதான் பழைய படங்களில் நாயகனுக்கு மட்டும் தந்தை பாத்திரங்களே வைக்க மாட்டார்கள்.

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் சுரேஷ். அப்படி எடுப்பது கூட ஒருவகை கொடுமைதாம். இதனால் தான் எம் சிறுவர்கள் தந்தையின் அணுக்கமின்றியே வளர்ந்துவருகிறார்கள்

முரளிகண்ணன் said...

அருமையான தொகுப்பு அருண்மொழிவர்மன்.

அருண்மொழிவர்மன் said...

நன்றி முரளிகண்ணன்

இது போன்ற சினிமா பதிவுகளை இடும்போது ஒத்த ரசனையுள்ளாவர்களுக்கு நல்ல சினிமாக்களை பார்ர்பது இலகுவாக இருக்கும் என்று நான் பரீட்சார்த்தமாக உணர்ந்தது உங்கள் பதிவுகள் மூலம்தான்

வாகுகன் said...

அருமையான பதிவு. நிச்சயமாக சிலவற்றை நாம் திரைப்படங்களில் இருந்துதான் பெறவேண்டும். காரணம் விரும்பியோ விரும்பாமலோ திரைப்படங்கள் எம்முடன் இரண்டறக் கலந்து விட்டன. நீங்கள் எடுத்த எல்லாப்படங்களும் அண்மைக்காலப் படம் என்பதால் அனைவரும் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். நீங்கள் உணர்த்த வரும் விடயம் இலகுவாக விளங்கியிருக்கும்.

அருண்மொழிவர்மன் said...

நன்றி வாகுகன்

சினிமாக்கள் மூலமாக் நல்ல் மாற்றங்களை சமுதாயத்தில் கொண்டுவரலாம் என்று நம்புபவன் நான். ஆனால் நம் சினிமா சட்டைக்குப் பின்னாலிருந்து அரிவாளை தூக்கவும் வரல் நீட்டி சவால் விடவும்தான் அதிகம் சொல்லிதருகின்றதோ என்ற நியாயமான கவலை எனக்குண்டு

கதியால் said...

தோளுக்கு மிஞ்சி வளர்ந்தால் தோழன் என்று சொல்வார்கள். இது தந்தைக்கும் மகனிற்கும் இடையிலான ஒரு புனித உறவு. நிச்சயமாக ஒரு தந்தை கண்டித்து வளர்ப்பதை விட இது தப்பு இது சரி என உணர்த்தி வளர்க்கும் போது நிறைய புரிந்துணர்வு வரும். தப்புகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தந்தையும் நண்பனே என நினைத்து வாழ்பவர்களுக்கும், மகனும் நண்பனே என வாழ்பவர்களுக்கும் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் கதியால்


வாரண ஆயிரம், லவ் டுடே படங்களில் என்னை கவர்ந்த விடயமே நீங்கள் குறிப்பிடதுபோன்ற உறவுமுறைதான்

நாடோடி இலக்கியன் said...

நல்ல தொகுப்பு.
"காதல் கவிதை" படத்தில் நிறைய காட்சிகள் நன்றாக இருக்கும், குறிப்பாக மணிவண்ணன்,பிரஷாந்த் இடையே பேசிக்கொள்ளும் வசனங்கள்.

நட்புடன் ஜமால் said...

அழகான அனுகுமுறை

அருண்மொழிவர்மன் said...

ஜமால்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருண்மொழிவர்மன் said...

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி நாடோடி இலக்கியன். காதல் கவிதை படத்தில் என்னை மிகாவும் கவர்ந்தது பிரஷாந்த் - மணிவண்ணன் இடையேயான வசனங்கள். இப்படியெல்லாம் படமெடுத்த அகத்தியனுக்கு என்ன நடந்தது???

கானா பிரபா said...

கலக்கல் நண்பா, தந்தை பாசத்தை மையப்படுத்தி வந்த படங்கள் சொற்பமே என்றாலும் உங்களின் பதிவு அந்த அழகான படங்களை சிறப்பாக சொல்லியிருக்கிறது. இன்னும் இயல்பாக கிராமத்து தந்தையை காட்டும் படங்களை அமீர் ரக இயக்குனர்கள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

jega said...

interesting artile.
i suggest you must write articles more frequently so we can share your thoughts more often

keep it up

அருண்மொழிவர்மன் said...

வருகைக்கு நன்றி பிரபா

உண்மைதான். கிராமத்து தந்தையை இயல்பாக காட்டக்கூடியவர்களுல் அமீர் முக்கியமானவர். ஆனால் அவரும் அரசியலில் ஈடுபடபோவதாக வருகின்ற செய்திகள் / வதந்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. ஒரு படைப்பாளியாக அமீரின் இடம் இலகுவாக நிரப்பகூடிய ஒன்றல்ல

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் ஜெகா

அதிகம் பதிவிடவேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால் வேலை, படிப்பு என்று சொற்ப நேரமே எஞ்சுகிறது. எனினும் இதனை ஒரு பாராட்டாக எடுத்து நன்றிசொல்லிக்கொள்ளுகிறேன்

Kiruthikan Kumarasamy said...

என்னுடைய பதிவுக்குத் தாங்களிட்ட பின்னூட்டத்திலிருந்து இங்கே வந்தேன். நல்ல முறையில் தொகுத்திருக்கிறீர்கள்.

அப்பாக்கள் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவயர்களாக சித்தரிக்கப்பட்ட படங்கள் ஏராளம். ஆனால் உண்மையில் நடுத்தர வர்க்க அப்பாக்கள் ஒவ்வொருவருமே அவர்தம் மகன்களுக்கு ஹீரோக்கள். அவர்களைச் சரியாக அவர்களின் இயல்புகளுடன் சேர்த்து எந்தப் படமுமே இன்றுவரை சித்தரிக்கவில்லை என்பது தான் உண்மை. பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களைக் கொச்சைசெய்யாமலாவது இருக்கலாம்

Post a Comment