- கனடா துர்க்கையம்மன் கோயிலில் கனேடியப் பொருளாதாரம் மேன்மையுற என்று ஹோமம் வளர்க்கின்றார்களாம் http://www.durka.com/
- கிறீஸ்தவப் பாதிரியார்கள் வண பிதா என்று பெயருக்கு முன்னர் போடுவது போல இந்துக் குருமாரும் தொடங்கி விட்டனர். உதாரணம் Chief Priest of the Temple Hindu Rev. Kanaswami Thiagarajahkurukkal (அறிவித்தலில் இவர் பெயர் கணசுவாமி என்றே இருக்கிறது, கணசுவாமியோ கந்தசாமியோ !
- நேரில் வர முடியாதவர்கள் தபால் மூலமும் மணி ஓடர் அனுப்பி பூசைகள் செய்து கொள்ளலாமாம்
- கனடாவில் கடந்த சில ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து ஒரு இந்துக் குருக்கள் புத்தாண்டு தினம் அன்று கோயிலிற்கு விசேட பூசைக்காக சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் மறிக்கப்பட்டு அவர் மது போதையில் வாகனம் செலுத்தினார் என்று தண்டிக்கப்பட்டுள்ளார், அதே போல இன்னொருவர் e குளிசைகள் என்றழைக்கப்படும் , காம உணர்வைத் தூண்டுகின்ற - தடை செய்யப்பட்ட ecstacy குளிசைகளைப் பூசை முடிந்த பின்னர் விற்றார் என்று கைது செய்யப்பட்டார்.
இது போலவே இன்னொரு விளம்பரத்தையும் பார்க்க நேர்ந்தது. மக்களை எப்படி எப்படி எல்லாம் ஏய்த்துப் பிழைக்கலாம் என்று மத அமைப்புக்கள் ஏனைய எல்லா வியாபாரங்களிற்கும் வகுப்பே எடுக்கலாம் என்கிற அளவில் இன்றைய மத வியாபரிகள் செயல்கள் இருக்கின்றன. ரொரன்றோவின் பல பாகங்களிலும் இருந்த வியாபார நிலையங்களில் அண்மையில் கண்ட இன்னொரு விளம்பரம் கல்கி பகவான் இந்தியாவில் செய்கின்ற பூஜை ஒன்றை திரையில் லைவ்வ்வாகப் பார்க்க கட்டணம் செலுத்தி பதியுமாறு கேட்டு ($101.00) விளம்பரப் படுத்தி இருந்தனர். நித்தியானந்தனின் புகழ்பெற்ற 'லைவ் ஷோ' போலவே இந்த லைவ் ஷோவாலும் நிச்சயம் நிறையப் பேர் பணம் உழைத்துச் சென்றிருப்பர்.
கனேடியத் தமிழர்களிடையே புதிதாக வாகனக்களை வாங்குகின்றபோது அதை ஆலயங்களிற்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் வழக்கம் ஒன்று இருக்கின்றது. கார் ஒன்று வாங்கிய நண்பன் அதை ஒரு கந்தசாமி கோயிலிற்கு கொண்டு செல்வதற்காக - அதன் முன்னர் அன்று கோயில் பூசகர் இருக்கின்றாரா என்பதை உறுதிப்படுத்த - தொலைபேசியில் அழைத்திருக்கின்றான். தொலைபேசி உரையாடலைப் பாருங்கள்; இது நான் காதால் கேட்டுக் கொண்டிருக்க நடந்த உரையாடல்
நண்பன்;- காருக்கு பூசை செய்யவேண்டும் அய்யா, எவ்வளவு செலவு
பூசகர் ;- தம்பி, காரென்ன புதிசோ இல்லை பழசோ
நண்பன் ;- ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்
பூசகர்;- புதிசிக்கு 40 டொலர், பழசுக்கு 25 டொலர்
நண்பன் ;- ஏன் அப்படி?
பூசகர் ;-காரில முதல் முதலா மனுசர் போகேக்க ஒரு தோசம் ஒன்று செய்யோணும், ஏற்கனவே யாரும் பாவித்திருந்தா அது தேவையில்லை?
மேலே சொன்ன சம்பவத்தைப் பாருங்கள். யாருக்கையா இந்த சுத்துமாத்து. ஏற்கனவே அழிவின் எல்லைவரை போய் நூலிழையளவு மாத்திரமே நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டுள்ள் தமிழ் சமூகத்துள் எரிகிற நெருப்பில் பிடுங்கியது லாபம் என்று கொள்ளை அடிக்கும் இந்த மரண வியாபாரிகள் பற்றி நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
4 comments:
Excellent article. Religion is a way of life & belief. Toronto temples are nothing but businesses.
Shiva
நன்றிகள்.
ஆரம்பத்தில் ஆலயங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை வியாபார நோக்குடன் நடைபெற்றன, இன்று முழுக்க முழுக்க வியாபார நோக்குடனேயே நிறைய ஆலயங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன.
துரதிஸ்டவசமாக மக்களில் சிலருக்கு இது தெரிந்திருந்தும் கடவுள் குற்றம் வந்துவிடும் என்ற பயத்தில் எவரும் எதுவும் பேசுவதில்லை என்பதே வருத்தமானது
Very good information to those who still beleive in hindu temples. Our Rev. Kanaswamies must do some contribution to our community as other christians do. Only our people act early against these atrocities. But how can they do?
Sivalingam
Very good information.
Post a Comment