நாம் முன்னேறிவிட்டோம், நாகரிக வளர்ச்சியில் உச்சத்தில் உள்ளோம் என்றேல்லாம் சொல்லப்படும் நம்பிக்கைகளை அடியோடு களைவதுபோல சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்தே வருகின்றன. காட்டுமிராண்டித்தனம் என்பதையும் தாண்டி கற்காலம் என்று சொல்ல வேண்டிய அளவு மிருகத்தனமாக நடைபெற்ற அண்மைய நிகழ்வுகளில் ஒன்று பிரபல பாடகி ரிஹானா (Rihanna) மீது அவரது காதலர் ப்ரவுணால் (Brown) மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவம் ரிஹானா – ப்ரவுண் என்கின்ற இரண்டு பிரபலங்களின் இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சனை என்பதை தாண்டி அன்றாட வாழ்வில் நாம் அவதானிக்கக்கூடிய பெண்கள் மீதான அடக்குமுறையின் மற்றொரு வடிவமாகவே பார்க்கப்படவேண்டும். ஆள்வதற்கான ஆளுமை என்பதை தாண்டி ஆண் என்பதால் பிரயோகிக்கப்பட்ட அதிகாரமே இந்த வன்முறையாக மாறியது என்பதை இங்கே வெளிப்படையாக காணலாம். வெறும் ரிஹானா – ப்ரவுண் பிரச்சனை என்றில்லாமல் தின வாழ்வில் நாம் காணும் மனிதர்களில் காணும் இயல்புகளே இங்கே ரிஹானா – ப்ரவுணாக திரிபடைந்துள்ளனர்.
தனது 16வது வயதில் அவர் வெளியிட்ட முதலாவது பாடல் தொகுப்பிலேயே பெரும் புகழ் பெற்றவர் ப்ரவுண் (Chris Brown). இதுவரை இவர் வெளியிட்ட இரண்டு ஆல்பங்களுமே (Chris Brown, Exclusive) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை. அது தவிர இவர் 16வது வயதில் வெளியிட்ட முதலாவது தொகுதியில் இடம்பெற்ற ரன் இட் ( run it) என்ற பாடல் ஒரு அறிமுக ஆண் பாடகர் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இன்றுவரை கருதப்படுகின்றது.
இதுபோல ரிஹனாவும் பாபடோஸில் 1988ல் பிறந்தவர். ப்ரவுண் போல இவரும் 2005லேயே அறிமுகம் ஆனார். கிட்ட தட்ட பாப் உலகில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட / ஏற்படுத்திக்கொண்ட குழப்பங்களால் ஒரு சரிவை ஏற்படுத்திக்கொண்ட காலப்பகுதிகளில் இசை உலகில் அடி எடுத்து வைத்த ரிஹானா குறுகிய காலத்திலேயே உருகியும் அழுதும் குதூகலத்துடனும் அவர் பாடிய பாடல்கள் மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் சகோதர உணர்வு, நட்புணர்வு என்று பயணித்து காதல் என்கிற கட்டத்தை அடைந்ததுமே பிரச்சனைகள் ஆரம்பமாகின. இதன் உச்சக்கட்டமாக கிராமி விருது வழங்கும் நிகழ்வுக்கான ஒத்திகையின்போது இருவருக்கும் ஏற்பட்ட விரிசல் விவாதமாகி கடைசியில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட நிலையில் ரிஹானா கண்களிலும், நெற்றியிலும் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டு, உதடுகள் வெடித்த நிலையில் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட மறுநாள் ப்ரவுண் சரணடைந்திருக்கின்றார். வட அமெரிக்காவில் கடுமையாக பின்பற்றப்படும் குடும்ப வன்முறை (Domestic Violence) என்கிற பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.
இவர்களது பிரபலம், பொருளாதார நிலை, வாழும் நாடு , கலாசாரம் என்று எல்லாவற்றையும் தாண்டி கிரிஸ் ப்ரவுணின் மனநிலை அல்லது பக்குவம் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக் இருக்கின்றது. அத்துடன் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையையும் அதன் காரணிகளையும் பார்க்கின்றபோது, எம்மை நாமே சுய பரிசோதனை செய்யும்போது எமக்குள்ளும் க்ரிஸ் ப்ரவுண்களும் ரிஹானாக்களும் உள்ளனர் என்று உணர முடியும்.
இது தொடர்பாக இப்போது ஆங்கில சஞ்சிகைகளில் வரும் செய்திகளில் ப்ரவுண் மீது வைக்கப்படும் மிக முக்கிய குற்றச்சாட்டு அவர் ரிஹானாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார் என்பதாகும். அதாவது அவரது ஒப்பந்தங்களை, இசையினை, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் அவரது தலையீடு அதிகம் இருந்ததென்றும் மூர்க்கத்தனமான அவர் இயல்புகளை சிலசமயங்களில் ரிஹானா கேள்வி கேட்டபோதெல்லாம் அது பிரச்சனைகளில் முடிவடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (அதாவது இது போல சிறிய அளவில் முன்னரே நடந்ததாகவும், சென்ற டிசெம்பரில் கூட ரிஹானாவின் கழுத்தில் காயங்களை அவர்கள் அவதானித்து கேட்டபோது அவர் அதை மறைத்ததாகவும், இம்முறை மறைக்க முடியாமல் போனதாலேயே முதலில் கார் விபத்து என்று சொல்லியும் பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டதாகவும் அவர்கள் நண்பர்களே சொல்லியிருக்கின்றனர்.). இது எல்லாவற்றையும் தாண்டி ப்ரவுண் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு அவரது சந்தேக குணம் பற்றியதாகும். ரிஹானா கலந்துகொள்ளும் இசைப் பயணங்களில் இவர் முன் அறிவித்தல் இல்லாமல் திடீரென்று கலந்துகொள்ளுவது அவரது சந்தேக புத்தியின் காரணமாகத்தான் என்பது ஒரு வாதம். ( Kanye West உடன் இவர் சென்ற ஆண்டு பயணத்தில் ப்ரவுணின் வருகை குறிப்பிடத்தக்கது, இது தற்செயலானது என்று எதிர்வாதம் செய்பவர்கள் கிரிஸ் ப்ரவுன் போன்ற பிரபலம் அவர் காதலியின் இசை நிகழ்வுக்கு திடீரென்று கலந்துகொள்லுவது தற்செயலானது என்பது நம்ப சற்று கடினமானது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.) அது போல Justin Timberlake, Jay Z போன்றவர்களுடன் ரிஹானாவுக்குள்ள நட்பை இவர் சந்தேகப்படுத்திப் பார்ப்பதாகவும், கிராமி விருதிற்கான ஒத்திகையின்போது “டிம்பலாண்டுடன் உனக்கு தொடர்புள்ளது, நீ அவனுடன் உறவு கொள்கிறாய், அவன் படுக்கையில் உன்னுடன் எப்படி நடந்துகொண்டான்” என்று பலர் முன்னிலையில் ப்ரவுன் பேசியதாகவும் செய்திகள் சொல்கின்றன. இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ப்ரவுணின் கைத்தொலைபேசியில் அவரது முன்னாள் காதலியின் தொலைபேசி இலக்கம் இருந்ததாகவும் அது தொடர்பாக எழுந்த கருத்து வாக்குவாதத்திலேயே ரிஹானா தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதுதான் ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டம்.
இதே சமயம் 2007ல் அளித்த ஒரு பேட்டியில் ப்ரவுன் தான் தன் மாற்றாந்தந்தை தன் தாயை கொடுமை படுத்தியதை தன் பால்யம் பூர்வமும் பார்த்ததாகவும் சிலசமயம் அவரை பேஸ்பால் மட்டையால அடித்து கொன்றுவிடலாமா என்று கூட நினைத்ததாகவும் கூறியிருந்தார். தன் வாழ்வில் பெண்களை தான் பெரிதும் மதிப்பேன் என்று உறுதி வேறு அளித்திருந்தார். அதையும் தாண்டி அவர் தன் காதலியுடன் நடந்துகொண்ட விதத்திற்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. சிறு வயதில் குடும்ப வன்முறையின் மத்தியில் வளரும் குழந்தைகள் தாம் வளரும் போது அதே வன்முறையை பின்பற்றுவார்கள் என்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சிறு வயதில் ஒரு விடயம் மீது ஏற்படும் அளவுக்கு அதிகமான வெறுப்புணர்வு பிற்காலத்தில் (அதே சாயல் கொண்ட) இன்னொரு விடய்ம் மீது பரவும் என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) சொன்னது குறிப்பிடதக்கது.
பெண் தன் அடிமை என்கிற நினைப்பு ஆணுக்கு சிறுவயதில் இருந்தே ஊட்டப்படுகின்றது. சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, ஆண் கெட்டால் சம்பவம் பெண் கெட்டால் சரித்திரம் என்றெல்லாம் சொல்லி சோடிக்கப்பட்ட சமுதாய கோட்பாடுகள் எல்லாம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பிற்போக்குத்தனங்கள். ஆணும் பெண்ணும் கைகோர்த்து இயங்கும் சமூகமே அடுத்த தலைமுறையை சரியான முறையில் உருவாக்கும் என்று ஆய்வு ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள். நிர்வாக ரீதியில் பெண்ணுக்கு அதிகம் திறன் உண்டென்றும், செயல் ரீதியான விடயங்களில் ஆணுக்கு அதிகம் செயற்படு திறன் உண்டென்றும் ஆய்வுகள் தெளிவாக சொல்கின்றன. இந்த நிலையில் பெண்களை உடல் வலிமை என்கிற ஒரே காரணம் கொண்டு அடக்க முற்படுவது அந்த சமுதாயத்தின் செயற்பாடுகளை பெருமளவு முடக்கும். தன்னை நிலை நிறுத்த முடியாமல் தன் துணையை அடக்குவதால் மட்டுமே தான் வெற்றி பெற்றவன் என்று காட்டும் மனப்பாங்கு மிகப்பெரிய ஒரு மனநோயின் சாயல்.

எம்மை நாமே பரிசீலனை செய்துபார்த்தால் இது ஏறத்தாழ எல்லா ஆண்களிலும் உள்ள குறை. பெண்ணை தெய்வம் என்று உயர்த்தாமல் (அதுவும் ஒரு விலக்கல்தான்) மாயப்பிசாசென்று வெறுக்காமல் தன் சக ஜீவியாய் பார்ர்கும் மனப்பாங்கு கை கூடவேண்டும். வட அமெரிக்க நாடுகளில் பெருகும் குடும்ப வன்முறைகளை கட்டுப்படுத்த Domestic Violence சட்டங்களை கடந்த ஆண்டுகளில் கடுமையாக்கி உள்ளனர். திருமணம் தாண்டிய உறவுகள், தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நாகரீகங்களை / பழக்கங்களை பெண்கள் மேற்கொள்வது என்று ஆயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் இதை ஆண்கள் செய்யும் போது சமூகம் எவ்வாறு தீர்ப்பளித்தது என்பதை பக்க சார்பில்லாமல் பரிசீலனை செய்ய வேண்டும்; கூடவே எனக்கு தோன்றும் இரண்டு கேள்விகளையும்
1) பல திரைப்படங்களில் தாம் விரும்பும் பெண் தம்மை விரும்பாதபோது விரல் சொடுக்கி உன்னை என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்து காதலிக்க வைக்கிறேன் என்று சவால் விடுபவர்களை நாயகர்களாக சித்திகரிப்பவர்கள் ஏன் பெண்கள் அதை செய்கின்றபோது வில்லிகளாக்குகின்றார்கள்? (உதாரணம் படையப்பா, திமிரு மற்றும் பல)
2) தமிழ் திரைப்படங்களில் வருங்கால முதல்வர்களாக நாயகத்தன்மை சிருஷ்டிகரிக்கப்பட்ட / படுகின்ற எம் ஜி ஆர், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் எல்லாரும் ஏன் பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று மிகவும் பிற்போக்கான கருத்துகளை தொடர்ந்து உளறித்தள்ளுகின்றனர்?

15 comments:
Rajini, dhanush ellaam ulara dhaan seivaanunga, avanungalukku vera enna theriyum?
இவர்களின் இந்த சித்திகரிப்பு எம்மிடமும் உள்ள ஒரு குணத்தின் பிரதிபலிப்பு தானே
u are writing so serious about this. do you think they were in true love?
Yes of course, they loved each other, but in the scene of ego, they had a problem.I read a news recently that Rihana ready to forgive chris brown. who never knows.
But good article.
Rihanna may be ready to forgive him. but he may still face the charges since the rules in states strictly states that
anonymus 1 and 2
இங்கே அவர்கள் இருவரும் உண்மையாக காதலித்தார்களா இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளைவிட அங்கு நடைபெற்ற குடும்ப வன்முறை தான் கவனிக்கப்படவேண்டியவிடயம் என்று நினைக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல் ரிஹானா மன்னிபதுடன் மட்டும் இந்த பிரச்சனை முடியப்போவதில்லை. ப்ரவுணின் மன நிலை மாறும்போது மட்டுமே இது தீரும்
anonymus 3
எனக்கு தெரிந்து கனடாவில் அப்படிதான் சட்டம் இருக்கின்றது. அதாவது பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது அந்த பெண் இல்லாமல் ஒரு மூன்றாவது நபர் செய்யும் குற்றசாட்டின்கீழும் குற்றம் சாட்டப்படுபவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கனடாவில் சட்டம் சொல்கின்றது
நன்றாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளீர்கள்..
//1) பல திரைப்படங்களில் தாம் விரும்பும் பெண் தம்மை விரும்பாதபோது விரல் சொடுக்கி உன்னை என்னிடம் மன்னிப்பு கேட்க வைத்து காதலிக்க வைக்கிறேன் என்று சவால் விடுபவர்களை நாயகர்களாக சித்திகரிப்பவர்கள் ஏன் பெண்கள் அதை செய்கின்றபோது வில்லிகளாக்குகின்றார்கள்? (உதாரணம் படையப்பா, திமிரு மற்றும் பல)
2) தமிழ் திரைப்படங்களில் வருங்கால முதல்வர்களாக நாயகத்தன்மை சிருஷ்டிகரிக்கப்பட்ட / படுகின்ற எம் ஜி ஆர், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் எல்லாரும் ஏன் பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று மிகவும் பிற்போக்கான கருத்துகளை தொடர்ந்து உளறித்தள்ளுகின்றனர்?//
நல்ல கேள்விகள்.. இதில் இன்னும் வருத்தமடைய வைப்பது என்னவென்றால்.. இதையேதான் பெரும்பாலான பெண்களும் ஆதரிக்கிறார்கள்..!!!
niingkal ithai penkalin pakkamaaka mattume eluthiyirukirirkal.
aanakal pakka niyaayaththaiyum solliyirukkalaame..
kiritharan
நல்ல படைப்பு. நன்றாக முன்னேறிய நாடுகளிலேயே இவை இருக்கின்றன எனும் போது, எம்மிடையே உடனடியாக மாறவேண்டும் என எண்ணமுடியாது. ஆனால் மாறவேண்டும். காலம் எடுக்கும்.
//niingkal ithai penkalin pakkamaaka mattume eluthiyirukirirkal.
aanakal pakka niyaayaththaiyum solliyirukkalaame..
kiritharan//
இதில் சொல்ல என்ன ஆண்கள் பக்க நியாயம் இருக்கு?????
//நல்ல கேள்விகள்.. இதில் இன்னும் வருத்தமடைய வைப்பது என்னவென்றால்.. இதையேதான் பெரும்பாலான பெண்களும் ஆதரிக்கிறார்கள்..!!!//
இதை நானும் கவனித்திருக்கின்றேன். ஆனால், இந்த நிலை மெல்ல மாறும் என்று நம்புகிறேன். ஆண்கள் புகைப்பிடிப்பது தான் ஆண்மைதனமானது என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று அது வெகுவாக குறைந்துவருகின்றது. அது போல இதுவும் மெல்ல மாறும்
இந்த மாதிரியான பிரச்சனைகள் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றால், பெண்களை சமமான பாங்குடன் மதிக்கும் எண்ணம் ஒவ்வொரு ஆணுக்கும் வர வேண்டும். தன் தாய் உயர்ந்தவள், சகோதரிகள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுபவர்கள், அடுத்த வீட்டுப்பெண்ணும் இவர்கள் போல் என்று உணர வேண்டும். மேலும் ஆணுக்கு போல பெண்களுக்கும் மனது உண்டு அவளும் தன்னை போல சராசரியானவள் என்றுணர வேண்டும். அதுவரை பெண்களுக்கான இந்த நிலை மாறது.
//பெண்களை சமமான பாங்குடன் மதிக்கும் எண்ணம் ஒவ்வொரு ஆணுக்கும் வர வேண்டும். தன் தாய் உயர்ந்தவள், சகோதரிகள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுபவர்கள், அடுத்த வீட்டுப்பெண்ணும் இவர்கள் போல் என்று உணர வேண்டு//
அது மட்டுமல்ல. எமது கல்வித்திட்டத்தில் சிறு வயதிலேயே ஆண்களையும் பெண்களையும் தனி தனியாக பிரித்து கிட்ட தட்ட ஒரு சிறாஇகூடம் போல கல்விச்சாலைகளை அமைப்பதை முதலில் கைவிடவேண்டும். அடுத்து இந்த கலாசாரா காவலர்களையெல்லாம் கொஞ்ச நாள் நாடு கடத்தி வைக்கவேண்டும்

Post a Comment