அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.
ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர் பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.

அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.
தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????
முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)
சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்படாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா

36 comments:
இவ்ளோ பெரிய விளக்கம் அவருக்கு கொடுக்கத் தேவையில்லை என்பேன். ஞாநி... குப்பை...thats all
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி கார்க்கி இப்படி விட்டு விட்டு தான் அவரது பித்தலாட்டம் கூடிப்போச்சுது
gnani is the biggest nonsence in the media world. he must pay for it at point
http://arivumathi.blogspot.com
நீங்கள் தவறான சுட்டி கோடுத்துள்ளீர்கள்,
//gnani is the biggest nonsence in the media world. he must pay for it at point//
முற்று முழுதாக ஆமோதிக்கிறேன். இதுபோல இவரது பித்தலாட்டங்கள் நிறைய....
சரியான உதாரணம் பாலகுமாரனுடனான இவரது சந்திப்பு
//நீங்கள் தவறான சுட்டி கோடுத்துள்ளீர்கள்,//
நன்றி விருபா..... இப்போது திருத்தி விட்டேன்
i heard he is a gay himself in net....
ஒரு பால் விளைவு என்பது ஒருவரது வாழ்க்கை முறை பற்றிய தெரிவு. அப்படியே இருந்தாலும் அதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஞாநி போல இதை கொச்சைப்படுத்தி (ஜெ - சசி பற்றி பூதாகரமாக்கியது) ஒரு போதும் பேச மாட்டேன். விஷம் சேரா மனம் என்னுடையது
சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ
யாரு இவுங்க?
நக்கலாக கேட்கிறீர்கள் என்ற் நினைக்கிறேன். இவர்கள் மூவருமே அரசியல் விவகாரங்களை, செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள். ஆனால் பக்கச் சார்பான எழுதுக்கி சொந்தக்காரர்கள். அதனால் வரலாற்று பிழைகளை தெரிந்தோ / தெரியாமலோ செய்து கொண்டிருப்பவர்கள்
அது தான் சொல்லீட்டீங்களே. அப்புறன் என்ன ஆய்வாளர்கள்? விபச்சாரம் செய்பவர்கள்.
ஆனந்த விகடன் இவரை வெளியேற்றியது போல குமுதமும் இவரை வெளியேற்ற வேண்டும். நம்ம ஊர்ல கேட்க நாலு ஆளு இருக்காங்கன்னு தெரிஞ்சா என்னா வேணும்ணாலும் பேசுவாய்ங்க. மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல, அப்டித்தான் இது.
i don't understand why people are still calling him gnani. he does not seserve that name. he should have been called as sangaran - his real name.
second thing he should stop writing and acting in movies in comedy rolls such as mayilsamy
//மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல, அப்டித்தான் இது//
இதெ எம்மவர்களிடையே கால காலமாக் இருக்கின்ற ஒரு பழக்கம்....நீங்கள் சொன்னதுபோல வெகுவிரைவில் இவர் குமுதத்தாலும் துரத்தப்படலாம்.... இவர் குடைச்சலை தாங்க அவர்களால்கூட முடியாது...
அதன் பின்னர் மீண்டும் அவரது பரீக்ஷா குழுவை தொடங்கலாம்
செந்தில்நாதன்..
// he should have been called as sangaran - his real name.
//
ம்ம்... சங்கரன் ஞாநியான கதை என்று ஒரு தொகுப்பை யாராவது வெளியிடவேண்டும்...
வருகைக்கு நன்றிகள்
இப்படித்தான் முன்னுக்க்கு வரவேண்ட்டும் என இல்லாமல் எப்படியும் முன்னுக்கு வரலாம் என ஞாநி நினைக்கிறாரோ? உங்கள் தர்க்க ரீதியான கருத்துகளுக்கு நன்றி. இங்கே ஈழத்தில் நடக்கும் குருதி தோய்ந்த "விடுதலைப்போராட்டம்" அங்கே தமிழகத்தில் பலருக்கு காமடியாக கிடக்கு. அதில் ஞாநியும் அடக்கம். தம்மைப் பக்கச்சார்பற்றவர்கள் என எண்ணுவோர் விடுதலைப்போராட்டத்தையும் அந்த நோக்கில் பார்ப்பதில்லை. விமர்சிப்பது வேறு. விதண்டாவாதம் செய்வது வேறு. ஞாநி....இரண்டாவது (விதண்டாவாதம்/அபத்தம்).
நன்றி தமிழ்விரும்பி.....
எல்லாவற்றையும் கடந்து மனிதாபிமானம் என்ற அளவில் பார்ப்போம். அங்கே தினமும் செத்துக்கொண்டிருக்கும் பொதுமக்களை. ஷெல் அடித்து 2பேர் 3 பேர் சாவதெல்லாம் சாதாரணமாகி 10பேர் 20 பேர் செத்தால்தான் அஎய்தி என்றாகிவிட்ட ஒரு பூமியில் வாழ்கிறோம். இந்நேரத்தில் தன்னை அதி மேதாவி என்றெண்ணிக்கொண்டு இவர் செய்வது மிகுந்த கண்டணத்துக்குரியது. அவரது கருத்தை சொல்ல அவ்ருக்கு உரிமையுள்ள அதே நேரம், அதிலுள்ள நச்சு தன்மையை எடுத்துக்காட்ட எமக்கும் உரிமையுண்டு.
கலைஞரின் அரசியலில் பல விமர்சனங்கள் இருந்தாலும் அவ்ர் இது தொடர்பாக எடுத்த அண்மைக்கால நடவடிக்கைகள் தாராளமாக ஆதரிக்கப்படவேண்டியவை. இந்நிலையில் இவர் கலைஞரையும் பிரபாகரனையும் இணைத்து ஏதோ கோமாளித்தனம் செய்கிறார்
Gnani always a Bhramin. so there is no wonder he opposes LTTE. He has to obey the orders of Bhramin leader Jayalalitha. Same time he wants to show that he is very progressive. He attacks Hindutva often, just to cheat the people. He always find fault with Karunanidhi. If monsoon fails, for him it is only because of DMK rule, and if Jayalalitha is in power everything will be alright for him.But I wonder one thing how Kumudham publishes his blabberings against Tamil Eelam! If at all Kumudham has some concern for our brtheren at Srilanka, they should immediately push out Gnani. will hey do?
//Gnani always a Bhramin. so there is no wonder he opposes LTTE. He has to obey the orders of Bhramin leader Jayalalitha//
உண்மைதான். சுவீ கூட ஞாநியை நரம்புகளே பூனூலாய்போனவர் என்று கூறியிருந்தார். இவரது இந்த துவேச போக்கு / வெறி இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவர் போடும் நடுநிலைவாதி வேடத்தை சிலர் நம்பி வருவது இன்னும் வேதனைக்குரியது. கருணாநிதியையும் பாலகுமாரனையும் இரண்டு திருமணம் என்று வரிக்கு வரி பழித்த இந்த மேதாவி, தான் பிரிவோம் என்ற உடன்படிக்கையுடனேயே மணாவாழ்வில் ஈடுபட்டதாக கூறி கோமாளித்தனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
// Kumudham has some concern for our brtheren at Srilanka, they should immediately push out Gnani. will hey do?// இது தான் எனது எதிர்பார்ப்பும். மிகப்பெரும் பாராம்பரியம் கொண்ட குமுதத்திற்கு இது அழகல்ல.
"ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?", ஞானியின் தலைப்பிலேயே ஞானியை அடித்தது அருமை; தொடரட்டும்.
//மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல,//
அந்த சுதந்திரமே இன்று உங்களையும், என்னையும் இங்கெ விவாதிக்க வைத்திருக்கிறது. ஞாநியின் எழுத்துகளில் நிறைய அபந்தங்கள் இருக்கலாம்.
சிங்கள இயக்குனரை தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனக்கு அதில் உடன்பாடில்லை என்பதை கட்டம் கட்டி விட்டு முழுக்க முழுக்க ஆதரித்து எழுதுவது, வன்முறையை ஆதரிப்பதாக காட்டுகிறது. அதிலும் திருமாவின் உதாரணம் அதை விட அபந்தம்.
இலங்கையின் விடுதலைக்காக வன்முறை தேவைப்படுவதாக கொண்டாலும், அது தமிழகத்தில் எதற்கு?
நன்றி குணாளன்...
அவரது அபாரமான தர்க்கிக்கும் ஆற்றலை வைத்து அவர் செய்யும் மோசமான கருத்து விதைப்புகளையே எடுத்து சொல்ல விரும்பினேன்
//வன்முறையை ஆதரிப்பதாக காட்டுகிறது. அதிலும் திருமாவின் உதாரணம் அதை விட அபந்தம்.
//
ஞாநி வைக்கும் மோசமான் குதர்க்கங்களின் பதிலடியாகவே திருமாவின் எள்வ் அமைந்தது என்பதை முன்னரே தெளிவாக்கினேன்
அதுமட்டுமல்ல,
//இலங்கையின் விடுதலைக்காக வன்முறை தேவைப்படுவதாக கொண்டாலும், அது தமிழகத்தில் எதற்கு//
தமிழகத்தில் வன்முறை வேண்டுமென்ரு நான் சொல்லவில்ல. இது போன்றா வன்முறைகள் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் அதற்காக இவர் செய்யும் கொச்சைப்படுத்திய சில விளக்கங்களை தான் நான் சொல்கிறேன்
அருண்மொழிவர்மன்........பாலகுமாரனுடனான ஞாநியின் பேட்டியில் என்ன குற்றம் கண்டீர்கள்? ஞாநியின் பல கேள்விகளுக்கு எழுத்து சித்தர் ஜகா வாங்கினார் என்பதே உண்மை. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனங்கள், இருதாரமணம், போன்ற கேள்விகளுக்கு பாலகுமாரன் திணறித்தான் போனார்.
மற்றபடி உங்கள் கருத்துக்களில் இருந்து நிறைய மாறுபடுகிறேன். மாற்றுப்பார்வை என்பதையே யாரும் முன்வைக்கத் தயாரில்லாத இந்த சூழ்நிலையில் மாற்றுக்கருத்துக்களை மிகுந்த வீச்சோடு வெளியிடுபவர்களில் ஞாநியும் ஒருவர் என்பதே என் கருத்து.
(ஈழ விடயத்தில் எனக்கும் ஞாநியோடு உடன் பாடு இல்லை. மற்றபடி he is great.)
:-))
இந்த பதிவில் நான் முன்வைத்த முக்கியமான விடயமே ஈழப்பிரச்சனை பற்றிய இவரது நிலைப்பாடுதான். இந்த விடயத்தில் இவரது குதர்க்கமான கருத்துக்கள் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சனையால் தினமும் மக்கள் கொல்லப்பட்டுகொண்டிருக்கையில் ஒரு உணர்வுபூர்வமான அலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றபோது அப்படி ஒரு அனுதாபம் காட்ட தேவையில்லை என்பது எத்தனை அயோக்கியதனமான கருத்து. அதுவும் தன்னை ஒரு மனிதாபிமானி என்று அடிக்கடி காட்டுகின்ற் ஞாநி எப்படி இதனை செய்வார்?
மனிதாபிமானம் மரித்துவிட்டது போன்ற நிலையில் இருந்து இவ்வளவு கேலியும் கிண்டலுமாக பேசுவது எத்தனை மோசமானத்உ?
பாலகுமாரன் - ஞாநி சந்திப்பில் அவர்து இருதாரமணத்தை அடிக்கடி கேட்டது , அதாவது பாலகுமாரன் இருதாரத்தை மறைக்காமல் ஒத்துக்கொண்டவர். முதல் தாரத்தை அவர் தனக்கு அந்த மணத்தில் உடன்பாடில்லை என்று சொல்லி விவாகரத்துபெற்று பிரிந்திருந்தால் அவர்து முதல் மனைவியின் நிலை என்ன?, அதுவும் மரபுகளுக்கு கட்டுப்பட்ட அவர் மனைவி இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்?
திருமணம் செய்யும்போதே ஒப்பந்தம் செய்து விவாகரத்து பெற்ற ஞாநி போன்றவர்கள் செய்வது, அவரது மனைவி மரபு ரீதியான பெண்ணாக இருந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்? இப்படி கேட்பது கூட மாற்று சிந்தனைதான்
எதிராளி திணறும்படி கேள்விகேட்பது கெட்டித்தனம். ஆனால் ஞாநி எதிராளியை திணறவைக்கவேண்டுமென்பதற்காக குதர்க்கம் பேசும் வகுப்பை சேர்ந்தவர்.
தனக்குப் பிடிக்காதவர்கள் நன்மையைச் செய்தால் ஞாநிக்குப் பிடிக்காது.
//தனக்குப் பிடிக்காதவர்கள் நன்மையைச் செய்தால் ஞாநிக்குப் பிடிக்காது.//
ஞாநியின் நிலைப்பாடை சரியாக சொல்லி உள்ளீர்கள். எஹ்டை செய்தாலும் அதில் ஒரு குதர்க்கம் பேசுவது இவரது வேலை. பொதுவாக பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற எவரையுமே இவர் ஏற்றுக்கொண்டது கிடையாது.
people should sstop reading him and taking his comments.....
a garbage like him should be discarded right away from kumudam and all medias
உங்கள் கருத்தில் இருக்கும் வேகம் புரிகின்றது, இந்த உணர்ச்சிவசப்படுதல் தான் எம்மினத்தின் சாபக்கேடு என்று நான் எழுதினாலும்.
ஞானியை விமர்சிக்கும் நீங்கள் கூட தவறான கருத்துகளை மக்கள் முன் வைப்பது சரியல்ல. இலங்கையில் யுத்தம் நடப்பதும், அந்த யுத்தத்தில் அகப்படும் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதும் உண்மை தான். ஆனால் திரள் திரளாக மக்கள் சாகிறார்கள் என்று கூறுவதும், அங்கே இன அழிப்பு நடப்பதாக கூறுவதும் மிகைப்படுத்தப்பட்டவை. உலகில் எங்கேயும் யுத்தம் நடந்தால் மக்களும் சாவார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம். காஷ்மீரில் நடக்கும் யுத்தத்தால் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செத்து மடிந்துள்ளனர். அதை வைத்துக் கொண்டு இந்தியா காஷ்மீரில் இன அழிப்பை செய்கின்றது என்று உங்களால் கூற முடியுமா? தமிழினவாதிகள் எல்லாவற்றையும் ஒன்றுக்கு பத்தாக சொல்லுவதால் தான் உலகில் யாரும் எங்கள் பக்கம் கவனிப்பதில்லை.
அது தானே, இந்தியாவில் நடச்க்கிற பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையை விடக் குறைவு. கொலைகளினை விடக் குறைவு. குண்டு வெடிப்புகளினை விடக் குறைவு. சிறுவர் துஷ்பிரயோகத்தை விடக் குறைவு. சாதிச் சண்டை குறைவு. மதச் சண்டை குறைவு. பட்டினிச சாவு குறைவு. இன்னும் எவ்வளவோ இருக்கு.
கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இது இலங்கை அரசின் பிரச்சாரம் அல்ல. புலிகளின் செய்திகளை தொடர்ந்து கேட்டு வந்தாலே தெரியும். உதாரணத்திற்கு தமிழ்நெட் கொடுத்த செய்திகளை பாருங்கள்.
SLAF bombing raid injures 3 civilians in Vanni
[TamilNet, Friday, 18 January 2008, 17:07 GMT]
SLAF bombing raids destroy civilian properties in Vaddakkachchi
[TamilNet, Tuesday, 08 July 2008, 02:13 GMT]
SLAF bombing kills IDP teenager, injures another in Puthukkudiyiruppu, Vanni
[TamilNet, Thursday, 30 October 2008, 11:20 GMT]
2 civilians wounded, SLAF attacks Puthukkudiyiruppu
[TamilNet, Monday, 29 October 2007, 13:13 GMT]
//ஞானியை விமர்சிக்கும் நீங்கள் கூட தவறான கருத்துகளை மக்கள் முன் வைப்பது சரியல்ல.//
இதிலிருந்து ஞாநியை விமர்சிப்பவர்கள் சரியானவர்கள் என்கிற கருத்து தொக்கி நிற்பதை அறியமுடிகின்றது.
//ஆனால் திரள் திரளாக மக்கள் சாகிறார்கள் என்று கூறுவதும், அங்கே இன அழிப்பு நடப்பதாக கூறுவதும் மிகைப்படுத்தப்பட்டவை//
அய்யா, ஒரு உயிர் செத்தால் அது பரவாயில்லை என்கிற கருத்து என்னை புல்லரிக்கவைக்கிறாது. பிரமிப்பூட்டும் ஞானமும் தெளிவும் உங்கள் கொடை
வாழ்க உங்கள் தமிழ்ப்பணி
//கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு//
அப்படியானால் ஏன் அங்கு செய்தி தணிக்கை அமுலில் இருக்க வேண்டும்.....
செய்தாளார்கள் கைது செய்யப்படவேண்டுய்ம், கொல்லப்படவேண்டும்????
//கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இது இலங்கை அரசின் பிரச்சாரம் அல்ல. புலிகளின் செய்திகளை தொடர்ந்து கேட்டு வந்தாலே தெரியும். உதாரணத்திற்கு தமிழ்நெட் கொடுத்த செய்திகளை பாருங்கள்.//
அனானி, நீங்கள் சொன்னதிலேயே கடந்த காலம் போலல்லாமல் அப்படின்னுட்டீங்க. அதாவது, தமிழீழ மக்களுக்கெதிராக காலங்காலமாக (சுமார் 60 ஆண்டு காலமாக) அடக்கு முறைகள் நடந்து வருகின்றன. இப்ப கொலைகளின் எண்ணிக்கை குறைவு, வண்புணர்ச்சி குறைவு என்பதற்காக சிங்கள அரசின் நடவடிக்கையை ஆதரித்து விடலாமா. கோணேஸ்வரி சம்பவம் ஒன்றே போதுமே சிங்கள அரசின் கொடூரத்தை விளக்க..
உலகின் எந்த நாடு தன் சொந்த மக்களையே கொன்று குவிக்கிறதோ அது கொடுங்கோல் ஆட்சியே...
புள்ளிவிவரத்தை பாருங்கள் சார், இந்தப் போராட்டத்தில் இதுவரை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் அழிக்கப் பட்டிருப்பதாக சொல்கின்றனர். இதெல்லாம் கேட்டுகிட்டும், நாம் இன்னும் விவாதத்திலேயே உட்கர்ந்து இருக்கலாம், அங்கே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டே இருப்பார்கள்....
வண்புணர்ச்சி குறைவு என்பதற்காக சிங்கள அரசின் நடவடிக்கையை ஆதரித்து விடலாமா. கோணேஸ்வரி சம்பவம் ஒன்றே போதுமே சிங்கள அரசின் கொடூரத்தை விளக்க..
//
இதனைதான் நானும் கூறினேன். ஏனோ அனானிக்கு அது ப்ரியவில்லை. அவர்கள் ஒருபோதும் இப்படியான சமரசம் தான் தமிழனை காலம் காலமாக அடிமையாகவே வைத்துள்ளது
Post a Comment